Month: ஜூலை 2026

ஜந்தர் மந்தரில் ஒரு மெரினா!
மோடி அரசுக்கு எதிராக வெடித்த மாணவர் எழுச்சி!

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின்…

சந்தி சிரிக்கும் தவெகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள், இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தல், பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்டால் நேரடியாக புகார்…

திரைகிழியும் ‘மகளிர் நலத் திட்டங்களின்’ உண்மை முகம்!
இதோ ஐ.எல்.ஓ. வெளியிட்ட ஆதாரம்!!

சமீபத்தில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (International Labour Organization – ILO) வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, உலகளவில், இந்தியா போன்ற குறைந்த நடுத்தர வருமான நாடுகளில்தான் (Lower Middle Income Countries) ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பாலின ஊதிய வேறுபாடு மிகவும்…

போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் த.வெ.க. அரசு!

டீசல் பேருந்துகளைப் பராமரிக்க ஒரு கி.மீ.க்கு ரூ.125 தேவைப்படுகிறதென்றால், மின்சாரப் பேருந்துகளைப் பராமரிக்க ரூ.81-க்கும் குறைவான தொகையே தேவைப்படுகிறது. அரசே மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்கினால், போக்குவரத்துத் துறை இலாபத்தோடே இயங்க முடியும். மக்களுக்கும் சிறந்த, தரமான சேவையை வழங்க…

பல் இளிக்கும் பாசிச எதிர்ப்பு

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் “இந்தியா” கூட்டணி உருவாகியபோது, “பாசிச எதிர்ப்பில் மிகப்பெரிய நம்பிக்கை” என்று பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளும் பல மா-லெ குழுக்களும் கூடக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், “இது ஒரு சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கூட்டணி” என்று செங்கனல் எழுதியது.…

மோகன் யாதவின் நிலப் பேரம் : கிழிகிறது பா.ஜ.க.வின்
ஊழல் எதிர்ப்பு முகமூடி

மோடி அரசு தான் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றம் சுமத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.கவும் ஊழலுக்கு எதிரானவர்களாகவும், அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் காட்டி வருகிறார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல்…

செங்கனல் – ஜூலை – ஆகஸ்ட் 2026 – அச்சு இதழ்

செங்கனல் ஜூலை – ஆகஸ்ட் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு மூர்க்கத்தனாமக முயலும் மோடி கும்பல்! தீவிரமாகும்…

இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!

பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான…

அடையாள அட்டை சர்ச்சைக்கு அப்பால் :
APAAR-இன் உண்மை முகம்

கடந்த வாரம், தமிழ்நாட்டின் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். மாணவர்களின் சாதி குறித்த தகவல்களும் அந்த அட்டையில் இடம்பெறும் என்று அவர் கூறியது, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய எதிர்ப்பைச்…

தங்க மோதிரம் எதற்கு? தனியார்மயத்தை நிறுத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில்…