தேர்தலைப் புறக்கணியுங்கள், பா.ஜ.க.வைத் தெருவில் வீழ்த்துங்கள்! – பரகலா பிரபாகர்

இன்று ஹைதராபாதில் இருந்து விமானத்தில் என்னுடன் பயணித்த சகபயணி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “பாருங்கள் பரகலா, நீங்கள் ஒரு முக்கியமான விசயத்தைத் தவறவிடுகிறீர்கள். பாஜக-வின் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பாஜக-வுக்கு வெவ்வேறு அணிகள் உள்ளன. அவை ‘மோர்சாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பாரதீய ஜன யுவ மோர்சா (இளைஞர் அணி), மகளிர் அணி, விவசாயிகள் அணி, …










