செங்கனல்

செங்கனல்

மோடியின் ஆட்சியில் “சர்வம் அதானிக்கு அர்ப்பணம்”

“உடுக்கை இழந்தவன் கை போல” என உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுத்தார் திருவள்ளுவர். திருவள்ளுவராவது ஆபத்து வரும்போது உடனே உதவி செய்வதை நட்புக்கு இலக்கணமாக்கினார், ஆனால் மோடியோ தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பிரச்சனை வரும் முன்னரே, எதிர்காலத்தில் நஷ்டம் வந்துவிடுமோ என்றஞ்சும் சூழல் ஏற்பட்ட உடனேயே ஓடோடிச் சென்று உதவி செய்ததன் மூலம் நட்புக்கு புது …

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம்
மோடியின் மற்றொரு பொய் பிரச்சாரம்!

“இன்று, இந்தியா ஒரு உணவு உபரி நாடாக உள்ளது. ஒரு கட்டத்தில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய கவலையாக இருந்தது, இன்று, உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது.” இது, சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விவசாயப் பொருளாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மோடி பேசியது.

இந்தியாவின் …

அதானி – செபி கள்ளக்கூட்டை
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
இந்தியாவிற்கு எதிரான சதி என
கதையளக்கும் காவி கும்பல்

அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானியின் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு அதானி குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை.

அதானி மீதான பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரிப்பதாக கூறிய இந்திய பங்குச் சந்தைகளைக் கட்டுபடுத்தும் அமைப்பான செபி (இந்திய பங்கு …

”சுதந்திர” இந்தியாவின் மென்னியை முறிக்கும் வெளிநாட்டுக் கடன்!

இன்று ஆகஸ்ட் 15, செங்கோட்டையில் கொடியேற்றி “சுதந்திரத்தின்” அருமை பெருமைகளைப் பேசி முடித்து 2047க்குள் முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக  மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், ஒரு பொற்காலத்தில் நம் நாடு நுழைகிறது எனக் கூறியிருக்கிறார் நரேந்திர மோடி.  

1947, ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1947க்கு …

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 3

தொடர் நிலச்சரிவுகள், பெருவெள்ளம், புவிசூடேறுதல் மறுகாலனியாக்கச் சுரண்டலே பிரதானக் காரணம் 300 ஆண்டுகால காலனியாதிக்கம் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணுமளவுக்கு 30 ஆண்டுகால மறுகாலனியாக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைத்துச் சின்னா பின்னமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் இவ்வாறு பலவீனப்பட்டுப் போனதுதான் கேரளத்தில் நடந்துவரும் தொடர் …

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 2

மறுகாலனியாக்கத்தின் கீழ் சுமார் 300 ஆண்டுகால நேரடி காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பலமடங்கு பேரழிவை 30 ஆண்டுகால மறுகாலனியாக்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சந்தித்துள்ளது. 1990-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் மக்களின் உழைப்பை மட்டுமல்ல இயற்கை வளங்களையும் எல்லையில்லாமல் சுரண்டிக் கொழுத்து…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 1

கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சுமார் 400 பேருக்கும் மேல் இதுவரை (09.08.2024) பலியாகியுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. கேரளாவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றான இந்தக் கோர நிகழ்வு நடந்தேறியுள்ளது கேரளாவில் தொடர்கதையாகிவரும் நிலச்சரிவுகளும் அதன்…

வக்பு வாரிய நிலங்களை – அதன் சொத்துக்களை பறித்தெடுப்பதற்கான நகர்வே சட்டத்திருத்த மசோதா!

 

1954-இல் வக்பு வாரியம் உருவாக்கப்பட்டு, இன்றுவரை இயங்கி வருகிறது. இதுவரை எந்த அரசாங்கமும் கொண்டு வராத வக்பு வாரிய திருத்த மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜீ  திணிப்பதின் நோக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இம்மசோதா, “மத சுதந்திரத்தில் தலையீடோ, குறுக்கீடோ செய்யாது; வக்பு வாரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கொண்டு வரப்பட்டதாக” திருவாய் மலர்ந்துள்ளர் …

பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு எதிராக போராடும் மராட்டிய விவசாயிகள்!

மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம், விலை வீழ்ச்சி, கடன் போன்ற நெருக்கடிகளால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில்  தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் கணக்குப் படி, 1995 முதல் 2014 வரை 2,96,438 விவசாயிகளும், 2014 லிருந்து 2022 வரை 1,00,474 விவசாயிகளும் தற்கொலை …

வங்கதேசம் – ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?
கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழலாமா?

 

வங்கதேசத்தில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த பாசிஸ்டான ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் விசுவாசியான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மாணவர் எழுச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என …