பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன், அணில் மற்றும் சேவல் என்கிற பல்வேறு பெயர்களில் உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் விநியோகிக்கப்பட்டு…












