செங்கனல்

செங்கனல்

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து …

திராவிட மாடலின் இரட்டைவேடம்!

சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் சனாதனக் கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்த போலிச் சாமியாரான மகாவிஷ்ணு தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். சர்ச்சைக்குறிய அந்நிகழ்வுக்கு பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன் சர்ச்சைகுறிய நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடைபெற்றால் தலைமை ஆசிரியரும் …

சாதிமோதல்களை உருவாக்கும் கயிறுகளை மாணவர்கள் அணிவது மத உரிமையா?

 

காவி பாசிச சித்தாந்த கருத்துக்கள் அரசின் உறுப்புகளில் தொடர்ந்து விஷம் போலப் பரவி வருகிறது. இதற்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது அவ்வப்போது வரும் நீதிமன்றத் தீர்ப்புகளிலும், நீதிபதிகளின் கருத்துக்களிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காவி பாசிஸ்டுகளின் கோட்டையாக உள்ள உத்திரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். ஆனால் …

திருக்குறள் விசயத்தில் தடுமாற்றம் எதற்கு?

அண்மையில் சென்னை அரசு பள்ளி மாணவியருக்கு, நன்னெறி போதிப்பதாக கூறி அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களை பேசிய மகாவிஷ்ணு என்ற அயோக்கியன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. விநாயகர் சதுர்த்திக்கு உறுதிமொழி ஏற்க சுற்றறிக்கை அனுப்பி விட்டு, கண்டனங்கள் எழுந்தவுடன்…

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களுக்கு, இலக்கு வைக்கும் மோடி!

  “வளர்ந்த இந்தியா என்கிற இலக்கை எட்ட, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும்” என ‘சுதந்திர’ தின விழாவில் பேசிய அதே உரையை, கடந்த 25.8.2024 அன்று மனதின் குரலிலும் (மன்.கீ.பாத்) மீண்டும் ஒலித்துள்ளார், நரேந்திர மோடி. அதிலும் குறிப்பாக, “சாதியவாதம் – குடும்ப அரசியலில் இருந்து நாட்டின் அரசியலை விடுவிக்க…

ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

இன்று (செப்டம்பர் 2), ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களின் 55வது நினைவு தினம். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, துண்டாடப்பட்டுக் கிடந்த, மிகவும் பின் தங்கிய ஏழை நாடான வியட்நாமை ஒன்றினைத்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என மூன்று ஏகாதிபத்தியங்கள் அடுத்தடுத்து தொடுத்த ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்த்து நின்று முறியடித்த…

குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்

குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து இரண்டு வருடங்களான பிறகும், காங்கோவிற்கு மட்டுமல்லாது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அதன் அண்டை …

சாமியார் ராம் ரஹீமுக்கு சிறை தண்டணையிலிருந்து விடுப்பு – பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக

  மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறது பாஜக. இதுவே…

ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக நடைபெறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்!

மின் துறையை  மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்து கட்டுவதற்காக மோடி அரசு, மின்சார சட்ட திருத்த மசோதா 2022 என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளை போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அவர்கள் பகற்கொள்ளை அடிப்பதற்காக  மின்பயன்பாட்டை துல்லியமாக அளவிடும் …

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். 

இந்த பயணம் “வெகுசிரத்தையாக, நுணுக்கமாக, ராஜதந்திரமாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்” காவிக் கும்பலின் சமூக …