செங்கனல்

செங்கனல்

பாசிச எதிர்ப்பைக் கைவிட்டு ஓட்டுச் சீட்டு ‘லாவணி’ நடத்தும் இந்தியா கூட்டணி கட்சிகள்

  பாசிச சக்தியான பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப் போவதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி என்பது ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், பாசிச எதிர்ப்பிற்கும் இந்தக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாம் தொடக்கம் முதலாக கூறிவருகிறோம். ஆனால் திமுகவின் தீவிர விசுவாசிகளோ இவ்வாறு கூறுவதென்பது பாசிசத்திற்குச் சாதகமாக…

பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

மோடியின் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையர், மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தேர்தல் நடக்கும் முன்பாகவே மோடிதான் வெற்றி பெற்று பிரதமராக வரப்போகிறார் என்று அவருக்காக 100 நாள் திட்டத்தை உருவாக்க வேலை செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இவர்கள் அனைவரும், அரசுத் தலைமை உத்தரவிடுகிறது அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்தின் அணியில் இணைந்து அதற்காக உளமார பணியாற்றுகின்றனர்.

லெனினை கற்போம்!
அவரின் சிறந்த மாணாக்கராக உருவாகுவோம்!

எந்த ஒரு சூழ்நிலையிலும், அச்சூழலையொத்த மார்க்சின் நூல்களைக்  கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அதனை தற்போதுள்ள சூழ்நிலைமையுடன் ஒப்புநோக்கி, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல் முறையாகும். இதனை லெனின் எப்படி செய்தார் என்பதற்கு 1905-07 புரட்சியில் இம்முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும் என்கிறார் குரூப்ஸ்கயா.

பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!

2024 – மே தினத்தில் உறுதியேற்போம்! பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! பிரச்சாரம், பேரணி, ஆர்ப்பட்டம் அன்பார்ந்த பாட்டாளி வர்க்கமே! நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், தங்களுக்கு விருப்பமுள்ள, உறுப்பினராகவுள்ள, இலவசங்களை வாரியிறைத்து மக்களை ஏமாற்றும்…

தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு
நிலைப்பாடற்றுத் திரியும்
 வினவுக்குத் தலைமையளிக்கும்
லும்பன் கும்பல்! – பாகம் 1

எமது அமைப்பு 40 ஆண்டுகாலமாகக் கடைபிடித்துவரும் “செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்பை” எவ்விதப் பரிசீலனையுமின்றி இவர்கள் துறந்தோடிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, “பங்கேற்பா, புறக்கணிப்பா” என்பதில் எவ்வித நிலைப்பாடுமற்று, நிலைப்பாடு எடுக்கவும் திராணியற்றுப் போய்விட்டார்கள் என்பதே உண்மையாகும்.

ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

ராகுல் காந்தி சொல்வதை நேர்மறையில் எடுத்துக் கொண்டால் கூட அவர் சொல்வது போல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக வின் பாசிச அஜண்டாவிற்கு சேவைசெய்யும் இந்த அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? அதற்கு இந்த கட்டமைப்பில் வாய்ப்புகள் உண்டா? இல்லை என்றுதான் கூறவேண்டும்.

கலைப்புவாதிகளின் ஆளும்வர்க்க சரணடைவை நியாயப்படுத்தும் வினைசெய்

பாசிச எதிர்ப்பு செயல்திட்டத்தை ஏற்கும் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் என்று கூறி புரட்சிகர வேடம் போட்டாலும், இந்த கலைப்புவாத கும்பலானது நடைமுறையில் எவ்வித நிபந்தனையும் இன்றி ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதி அடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை,

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…