செங்கனல்

செங்கனல்

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

கல்வி வியாபாரிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் தனியார்மயத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியான ஊழலும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதில் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கங்கனா ரனாவத் கன்னத்தில் விழுந்த அறை : குல்விந்தர் கவுர் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்!

கங்கனாவின் கன்னத்தில் விழுந்த அறை பாசிஸ்டுகளை ஒரு கணமேனும் நடுநடுங்க வைத்திருக்கும். எங்கே எந்த இடத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்ற அச்சம் ஒரு கணமேனும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அரிதினும் அரிதாய் இத்தகைய நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் நமக்குத் தென்படுகின்றன. சமூகத்தின் அறவுணர்ச்சி இன்னும் மரித்துவிடவில்லை என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான அபாயம் நெருங்குகிறது!

தான் மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் பெறுபவராக இருக்க வேண்டும், மற்றவர்கள் எல்லாம் தனது கட்டளைக்குக் கீழ்படிந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் மோடியின் இயல்பு.... இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவதும் செயல்படுவதும் மோடியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது அதனை கூட்டணிக் கட்சிகளுக்காக மாற்றிக்கொள்ள அவரால் முடியாது.... இப்படிப்பட்ட ஒரு நபரால் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சியை வழிநடத்திச் செல்லவே முடியாது

கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகள் முழுவதிலும் நீர்-நிலம்-காடுகளைப் பாதுகாக்கவும், தங்களது கண்ணியத்தையும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராகவும் பழங்குடியின விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ, இன-மத மோதல், எனும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களின் அனைத்து வகையான எதிர்ப்புகளையும் நசுக்கிவருகிறது.

மறுகாலனியாக்கத் திணிப்பும்! நீளும் நீட் – கியூட் தேர்வுகளும்!

  பள்ளிப்படிப்பை முடித்து, குறிப்பாக, மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கனவை எட்ட முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் – கியூட் போன்ற தேசியத் தேர்வுகள் அனைத்தையும் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டவைகளாக மாற்றும் என அறிவித்துள்ளது. ஆனால், இவைகளை ரத்து செய்வோம் என்றோ, கல்வி அனைத்தையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றோ…

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான…

அதானிக்காக இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு!

இந்தியா உலகத்துக்கே விஸ்வகுருவாக வளர்ந்து வருகிறது என்று கதை அளக்கிறார் பாசிஸ்ட் மோடி. அதே வேலையில் இந்திய தரகுமுதலாளிகளின் நலன்களிலிருந்தே பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டிக்க திரானியில்லாமல் இருக்கிறார். அதானியின் நலன்களுக்காகத்தான் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் அதனை புறக்கணித்துள்ளது இந்த காவி-கார்பரேட் பாசிச கும்பல்.

2024 தேர்தலில் மோடி அரசுக்கு சத்தமின்றி அதேசமயம் வலிமையான எதிர்ப்பாக குடிமைச் சமூகம் உருவாகிறது! – பரகலா பிரபாகர்

எவ்வாறாயினும், மோடி அரசைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியை இழப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. தோல்வியைத் தடுக்கும் பல நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது.

இன்னும் 16 மாதங்களில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடுமா?
ஒரு அதீத கற்பனை!

“பாசிசத்தின் ஒற்றை நபராக, பியூரராக கட்சிக்குள்ளும் நாட்டுக்குள்ளும் வளர்ந்துவரும் மோடி, தனது 75-ஆம் வயதில் பிரதமர் பொறுப்பில் இருந்து ஒதுங்கிவிடுவாரா? எல்லா பா.ஜ.க தலைவர்களையும் போல மோடியை கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்கள் பணிய வைத்துவிட முடியுமா?”