Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

காவிக் குண்டர்களின் கொடூர குற்றங்களை “சமூக நல்லிணக்கத்திற்காக” ஏற்றுக் கொள்ளச் சொல்லும் யோகி அரசு

எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில்…

தேசிய புலனாய்வு முகமையின் அடாவடித்தனமும் மோடி-அமித்ஷா கும்பலின் பெருமிதமும்!

இந்தியாவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான என்ஐஏ குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் 21, 2025 அன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்” தனது அரசாங்கம் பல சாதனைளைப் புரிந்துள்ளதாக வெற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அதில் தேசிய…

அணுசக்தி மசோதா : அமெரிக்காவின் இலாப வெறிக்கு அடிமை சேவகம் செய்யும் மோடி அரசு!

டிசம்பர் 2, 1984 அன்று போபாலிலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மெத்தில் ஐசோ சயனைட் வாயு 20,000 மக்களை படுகொலை செய்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அங்கு உயிருடன் இருக்கும் மக்களோ பிள்ளைகளை பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப் பிள்ளைகளை…

கிறிஸ்துமஸ் தாக்குதல்கள் :
கிறிஸ்தவர்களுக்கு எதிராக பழங்குடியினரைத் தூண்டிவிடும் காவி பாசிஸ்டுகள்

சத்திஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த எதிர்ப்பை…

பாராளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும்
காவி பாசிஸ்டுகள்

2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு சற்று முன்பாக, இந்திய நாடாளுமன்ற வாயில் படிக்கட்டில் விழுந்து வணங்கியதோடு நாடாளுமன்றத்தை ’ஜனநாயகத்தின் ஆலயம்’ என வர்ணித்தார். இது மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்பொழுது…

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற…

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச்…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூ.பி.களில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – SIR) அமலாக்கப்பட்டுள்ளது. எங்கே விண்ணப்பம் பெறுவது; எப்படிப் பூர்த்தி செய்வது; என்னென்ன ஆவணங்களை இணைப்பது;…

காவி பாசிஸ்டுகள் “வந்தே மாதரம்” பாடலை முன்னிறுத்துவது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து…

பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து…