செங்கனல்

செங்கனல்

ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி

எய்தவரை விட்டு அம்பை நோகும் ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு “போலீசார் நடத்திய கொடூரமான செயல்”, “காக்கை – குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறி அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, தனது…

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர தினத்தன்று வெளியே வந்துள்ளனர்.

2002ம் ஆண்டு கோத்ரா சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீது …

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு: தரமற்ற கல்லூரிகளும் கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலமும்

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கள்ளச் சாராய ரவுடிகளும் அரசியல் பினாமிகளும் கல்வித் தந்தைகளாக பரிணாம வளர்ச்சியடைந்து தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என ‘பலன் எதிர்பாராமல்’ செயலாற்றிவரும் நிலையில், மாணவர்களை சிறந்த பொறியாளராக்க வேண்டும் என்ற ‘உயரிய நோக்கத்தோடு’ அவர்களை தங்களது கல்லூரிகளை நோக்கி ஈர்ப்பதற்கான …

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின் காரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடெடுத்தது.

ஆனால் அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு …

75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ : அமுதம் அல்ல; நஞ்சு!

7,000 பேர் பங்கேற்புடன் அவர்களைச் சுற்றி 10,000 பேர் பாதுகாப்புடன், செங்கோட்டையைச் சுற்றி பரந்த கண்காணிப்புடன் இந்திய நாட்டின் 75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ ஆகஸ்டு 15 இல் நடைபெற்றுள்ளது. கலந்துகொண்டவர்களும் உணவு, கைப்பை, தண்ணீர் பாட்டில், சிகெரெட் லைட்டர், ரிமோர்ட் கண்ட்ரோல் கார் சாவி, கேமரா, பைனாகுலர், குடை போன்ற பொருட்களைக் …

காவிமயமாகும் கல்வி-பாசிசத்திற்கான துருப்புச்சீட்டு-1

தேசியக் கல்விக் கொள்கையை(NEP) நடைமுறைப்படுத்த 2020 மே மாதத்தில் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பள்ளி-கல்லூரிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்குள், நிதிமூலதனத்தின் ஆதரவு பெற்ற கல்விச் சேவை அமைப்புகளும் மற்றும் காவிகளின் தலையீடுகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பள்ளி-கல்லூரிகளின் பாடத்திட்டத்தினை மாற்றுவது என்ற வேலைகளில் மிகமும்மரமாக காவி கும்பல்கள் இறங்கியுள்ளன. கடந்த …

சூப்பர் பக்ஸ் – மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்க்கிருமி

“இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன்களையும் அளிக்கிறது;

யாருக்கான சுதந்திரம்?

இது யாருக்கான சுதந்திரம்?

எனக்கான சுதந்திரமும் இல்லை
உனக்கான சுதந்திரமும் இல்லை
இது மோடிகள், அமித்சாக்களுக்கான சுதந்திரம்
அம்பானி, அதானிகளுக்கான சுதந்திரம்

நிதிமூலதனத்திற்கான சுதந்திரம்
சுரண்டுபவர்களுக்கான சுதந்திரம்
மத வெறிக்கான சுதந்திரம்
சாதிய ஒடுக்குமுறைக்கான சுதந்திரம்

ஓட்டு போட சுதந்திரம், ஓட்டு கேட்க சுதந்திரம்
கொலை, கொள்ளையனும் தேர்தலில் நிற்க சுதந்திரம்
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க …

ஊபா கைதுகள்: சட்டபூர்வமாக அரங்கேறிவரும் பாசிசம்

இம் என்றால் கைது உம் என்றால் சிறை என்று அரசின் ஒடுக்குமுறைக் குறித்து பரவலாக சொல்வதுண்டு. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ ஒருபடி மேலே சென்று தங்களது கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை என்றாலே NSA, UAPA போன்ற மிகக்கடுமையான சட்டங்களை  கொண்டு ஒடுக்கி வருகிறது.

நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை …

விலைவாசி உயர்வை சகித்துக்கொள்! வரி உயர்வை கழுதைபோல் சுமந்துசெல்! பாசிச மோடி அரசின் ‘கீதா உபதேசம்’

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.92 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சமாளிப்பதற்கு கூலியோ, சம்பளமோ உயரவில்லை. கூலியையும், சம்பளத்தையும் உயர்த்திக் கேட்டுப் போராடினால் இருக்கின்ற வேலையும் பறிபோகும் என்ற நிலையே உள்ளது.…