செங்கனல்

செங்கனல்

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் III

ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்திற்கு (JCPOA) ஆரம்பம் முதலே அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது, 2015-இல் “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு பயங்கரமான ஒப்பந்தம். இது ஈரானை பணக்கார நாடாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது” என்று டிரம்ப் விமர்சித்தார். அமெரிக்க ஜனாதிபதி …

மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத்  தொகை கடந்த ஆண்டில் மட்டும் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்து, 37,600 கோடி ரூபாயாக  …

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் – II

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதிகளை கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு எனவும்; சர்வதேச அணுசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுசக்தி பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்வதற்கு 180 நாட்களுக்கு முன்பு வரை இந்த வசதிகளை பற்றி சர்வதேச அணுசக்தி முகமைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் …

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் -1

கடந்த இரண்டு வாரங்களாக உலகின் முழு கவனமும் வளைகுடா பக்கம் திரும்பியிருந்தது. மிகவும் வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டித்தனமான, அநாகரிகமான , அழிவுப் போரை ஈரான் மீது இஸ்ரேல்  தொடுத்தது. தனது அடியாளான இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்காவும் இப்போரில் தலையிட்டு ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசியுள்ளது.

ஈரான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது  ஈரான் …

சமஸ்கிருதம், இந்தி தவிர மற்ற மொழிகள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

“2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியைச்  செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல்
 இந்தியப் பொருளாதாரம் வளர்வது எப்படி?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஏறத்தாழ 3.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது ஜப்பானின் GDP யை (4.06 டிரில்லியன் டாலர்) கடந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா ஜப்பானை பின்னுக்குதள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக பலர் எழுதுகின்றனர்.…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று,  பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில்  இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் மேடையில் பாடிய பாடல். பாருங்கள் பரப்புங்கள்.        …

உலகின் 4-வது பொருளாதாரமாக உயர்ந்த இந்தியாவால் யாருக்கு பலன்?

  ஐ.எம்.எஃப் மதிப்பீட்டின்படி, இந்தியா உலகின் நான்காவது பொருளாதாரமாக உருமாறி வருகிறதென நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தனது அறிவிப்பில் தேனை தடவி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (மொ.உ.உ) பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, படிப்படியாக…

பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து…

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால் அது பாசிச சக்திகளின் வளர்ச்சியைத் தடைசெய்து தமிழகத்தினைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும்” என்று …