செங்கனல்

செங்கனல்

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…

காங்கிரஸ் கட்சியால் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?

 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “நியாயப் பத்திரா”, (நீதிக்கான ஆவணம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “இளைஞர்களுக்கான நீதி”, “மகளிருக்கான நீதி”, “விவசாயிகளுக்கான நீதி”, “தொழிலாளர்களுக்கான நீதி” மற்றும் “நீதியை நிலைநாட்டுதல்” போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

வறுமைக்கோட்டிற்குக் …

பாலஸ்தீனம் : இஸ்ரேல் யூதவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம்!

”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர்  என்பவர் எள்ளி நகையாடினார்.

தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின் தம் கண்ணெதிரிலேயே அதை இஸ்ரேலுக்குப் பறிகொடுத்து பின்னர் அதை மீட்பதற்காக போராடிய பாலஸ்தீனிய …

ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும்

 

 

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தனது மகிந்திரா பல்கலைகக்கழகத்திற்கு நன்கொடையாக 550 கோடி ருபாயை வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.  ஹைதராபாத் நகரில் 130 ஏக்கர் பரப்பளவில் அளவில் இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்போகிறார்களாம். இதை ஆக்ஸ்போர்டு, ஸ்டேன்போர்டு போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உருவாக்க வேண்டும் என்பது இவரின் நீண்டகாலத் திட்டமாம்.

“உலகத்தரம் …

தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!

  காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…

போராடும் ஜனநாயக சக்திகளின் மீது ஒடுக்குமுறை
ஒன்றிய அரசிடம் சரணடைவு :
இதுதான் திமுகவின் பாசிச எதிர்ப்பு

 

 

தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன், தமிழக அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வமுடன் …