Author: செங்கனல்

மின்துறை தனியார்மயமாவதைத் தடுக்காமல்,
கட்டண உயர்வைத் தடுக்க முடியாது

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் 26.73 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டும் 2.18 சதவீதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை மனதில்…

எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடும்
வங்காளதேச மாணவர்கள்!

நடப்பில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு வார காலமாக வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் படிப்படியாக மற்ற கல்வி நிலையங்களும் பங்கெடுக்க, அது…

மறுகாலனியாக்கத்தை மறுதலிக்காமல், மாநில மக்களின் வேலை வாய்ப்பு என்பது வெற்றுக் கனவே!

தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில், சொந்த மாநில மக்களுக்கு, 100% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிற மசோதாவை, கர்நாடகப் பேரவையில் கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 15-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.…

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் குண்டர் படையால் கொல்லப்பட்டவர்களை, யாரும் தாக்கவில்லை என்றும் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் கூறியிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று உத்தரபிரதேசத்தில்…

ஜப்பான் வங்கியின் கட்டுப்பாட்டில் இந்திய ரயில்வே
பாசிச மோடியின் ஆட்சியில் துரிதமாகும் மறுகாலனியாக்கம்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, ரயில்வே துறை குறித்துப் பேசிய போது, பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தி பயண நேரத்தை குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் 40,000 சாதாரண…

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத்…

வர்க்க உணர்வை சீரழிக்கும் – சிதைக்கும்
மது போதையும் – மத போதையும்
ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே!

உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது. இது போன்ற…

பருவநிலை மாற்றம்: சிக்கித் தவிக்கும் இந்திய குறுவிவசாயிகளுக்கு தீர்வுதான் என்ன?

நாம் வாழும் இப்புவிப்பரப்பு பருவநிலை மாற்றத்தினால் பேரழிவுகள் ஏற்படுகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது மிகத்தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா, ஏராளமான புயல்களையும், பெருவெள்ளத்தையும் சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியதோடு லட்சக்கணக்கான…