Author: செங்கனல்

மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன்…

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட…

அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

இந்திய சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தில் தனக்கு சாதகமான சரத்துக்களை சேர்க்கவும் சூரிய மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றவும். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி…

ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதானி குழும நிறுவனர் தலைவர் கௌதம் அதானி மீது, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான குரல்கள்…

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும்…

“கம்யூனிசமே வெல்லும்!” புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

இன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம், உலகையே ஆளப்பிறந்ததாக இருமாந்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள். அதே முதலாளித்துவம் பாசிசமாகப் பரிணமித்து மனித குலத்தின் எதிரியாக நின்ற…

கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி…

டிங்கிரி டிங்காலே – விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல்

புதியதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்றும், மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்றும், தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதாக கட்டமைக்கப்படும் விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல். பாடல் தயாரிப்பு : புரட்சிகர மக்கள்…

சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ…