செங்கனல்

செங்கனல்

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அகிய அமைப்புகள் குடியுரிமையைப் பறிக்கவே SIR! தமிழகமே, ஒத்துழைக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 15.12.2025 அன்று மாலை 3 மணிக்கு பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தலைமை…

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) உருவாக்கும் வேலை தான் நடந்துகொண்டிருக்கிறது. …

SIR : காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான ஆதரவு தரும் உச்சநீதிமன்றம்.

  “ஆதார் வைத்திருக்கும் காரணத்திற்காக ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக்க முடியுமா?”, “ஒருவருக்கு ரேஷனுக்கு ஆதார் வழங்கப்பட்டதால், அவர் வாக்காளராகவும் ஆக்கப்பட வேண்டுமா? ஒருவர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர், தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்….”, “கொடுக்கப்படும் படிவங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையம் என்ன போஸ்ட் ஆபீசா”, “ஓருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக அவர்…

தனியார்மயத்தை ஆதரிக்கும் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா?

சென்னை மாநகரத்தின் இரண்டு மண்டலங்களில் துப்புறவுப் பணியைத் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை, நடிகர் விஜயின் தவெக கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுணா, சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசி அவர்களது போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார். அதன்பிறகு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்த…

SIR என்ற பெயரில் NRC-யைத் திணிக்கும்
காவி-பாசிசக் கும்பல்

உத்தம் குமார் பிரஜ்பாசி மேற்கு வங்க மாநிலத்தின் கூஜ் பெஹார் மாவட்டத்தில் உள்ள சதியார் குதிர் கிராமத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் ஒரு சாதாரண விவசாயி. இயல்பாக சென்று கொண்டிருந்த உத்தம் குமாரின் வாழ்க்கை, அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின் குடியுரிமையை பற்றி விசாரிக்க கூடிய வெளிநாட்டவர்களுக்கான  தீர்ப்பாயத்திலிருந்து (Foreigners Tribunal) வந்த நோட்டீசால் நிலை குலைந்து …

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் அடங்கிய அமர்வும்
அவை மாற்றி எழுதிய தீர்ப்புகளின் அவலட்சணமும்!

  பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் வேறு சில நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்புகளை நீக்கியதோடு, அதற்கு மாற்றான தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது. அதாவது, அணைக்கட்டுகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், மேம்பாலங்கள் போன்ற பெரும் கட்டுமானத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!  தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். அமலாகிவருகிறது. உண்மையில், இப்போது நமது நாட்டில் அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல; கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், உரிமைக்காகப் போராடும் மக்கள், இசுலாமியர்கள், பத்திரிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் – ஒருவரியில் சொன்னால் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் – அனைவரின் வாக்குரிமையையும்…

மெட்ரோ இரயில் திட்டம் : யாருக்கு இலாபம்?

கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும், 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துக் கட்சியினரும், தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி.  நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில்…

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு பதிலாக, ஊதியத் தொகுப்பு (2019), தொழில்துறை உறவுகள் தொகுப்பு (2020), சமூகப்…