செங்கனல்

செங்கனல்

காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பிரபல உண்மை அறியும் இணையப் பத்திரிக்கையான ஆல்ட் நியூஸ் ன் துணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது தேச துரோக வழக்கு பதிந்துள்ளது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச காவல்துறை. தேச துரோக வழக்கு போடுகின்ற அளவுக்கு ஜுபைர் செய்த குற்றம் என்ன?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்துமதவெறி சாமியாரான நர்சிங் ஆனந்த், முகமது நபி குறித்து தரக்குறைவாக …

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் – டிசம்பர் 8

பத்திரிகை செய்தி! புரட்சிகர மக்கள் அதிகாரம் 03-12-2024 அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே! பொதுமக்களே! வணக்கம்! புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் இரு மாதங்களாக இயக்கம் மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். இதன் இறுதி நிகழ்ச்சியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று கடந்த டிசம்பர்-01 அன்று தருமபுரியில் நடைபெற…

மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1 2024 (இன்று) தர்மபுரியில் பொதுகூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்…

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற  வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் …

அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

இந்திய சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தில் தனக்கு சாதகமான சரத்துக்களை சேர்க்கவும் சூரிய மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றவும். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் மற்றும் அஜூர் பவர் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறையும் …

ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

 

 

சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதானி குழும நிறுவனர் தலைவர் கௌதம் அதானி மீது, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான குரல்கள் நாடுமுழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் …

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஊடகங்களும் ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் தேர்தலை ஒரு ஜனநாயக திருவிழா …

“கம்யூனிசமே வெல்லும்!” புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

இன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம், உலகையே ஆளப்பிறந்ததாக இருமாந்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள். அதே முதலாளித்துவம் பாசிசமாகப் பரிணமித்து மனித குலத்தின் எதிரியாக நின்ற போது, மிகப் பெரிய ஏகாதிபத்தியங்கள் எல்லாம் கை கட்டி வாய் பொத்தி நின்ற…

கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

733 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி …