Author: செங்கனல்

மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல்
 இந்தியப் பொருளாதாரம் வளர்வது எப்படி?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஏறத்தாழ 3.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது ஜப்பானின் GDP யை (4.06 டிரில்லியன் டாலர்) கடந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் மூலம்…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று, பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர்…

உலகின் 4-வது பொருளாதாரமாக உயர்ந்த இந்தியாவால் யாருக்கு பலன்?

ஐ.எம்.எஃப் மதிப்பீட்டின்படி, இந்தியா உலகின் நான்காவது பொருளாதாரமாக உருமாறி வருகிறதென நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தனது அறிவிப்பில் தேனை தடவி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (மொ.உ.உ) பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை…

பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர்…

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால்…

விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத் திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக…

மோடி கும்பலின் “வறுமை ஒழிப்பு” எனும் பித்தலாட்டம்

மோடி ஆட்சிக்கு வந்து பதினோறு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனை பாஜகவும், கோடி மீடியாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடின. 1947-க்கும் 2014- க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அடைந்திராத வளர்ச்சியை மோடியின் பதினோறு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அடைந்துள்ளாதாக மோடி கும்பல் படுஜோராக…

நேரலை: ஆர்ப்பாட்டம் – பஹல்காம் தாக்குதல் : காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பஹல்காம் தாக்குதல் நாட்டையே பயங்கரவாத பேராபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிச கும்பலை வீழ்த்துவோம்! ஆர்ப்பாட்டம் – சென்னை – எழும்பூர் – நேரலை – செங்கனல் …

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம் – ஆர்ப்பாட்டம்

பத்திரிக்கைச் செய்தி அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! “பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதகாலமாக புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர்…

அதானிக்கு, எல்ஐசி, அள்ளிக் கொடுத்த தொகை ரூபாய் 5000 கோடி!

மோடியின் எஜமான் அதானியின் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு அங்கமான, அதானி போர்ட்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கடன் சுமையோ ரூபாய் 36,422 கோடி. இவற்றை, ஈடு செய்வதற்கு கடன் பத்திரங்களை வழங்கி நிதியை திரட்ட முயன்று வருகிறது 333.அதானி நிறுவனம். பங்கு…