செங்கனல்

செங்கனல்

பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

“அத்தகைய சந்தர்ப்பத்தில் [அதாவது அந்த அமளிதுமளியான வாரங்களில்] மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்”

தீவட்டிப்பட்டி
தலித் மக்கள் கோயில் வழிபாட்டுரிமை பறிப்பு!
சாதி வெறியை தூண்டும் பா.ஜ.க-பா.ம.க கும்பல்!

சேலம் தீவட்டிப்பட்டியில், பார்ப்பன இந்துமதவெறி கட்சியான பாஜகவும், வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவும் இணைந்து, சாதிவெறியைத் தூண்டி, தலித் மக்களின் கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்திருப்பதைக் கண்டித்து,  புரட்சிகர மக்கள் அதிகாரம், மாநில செயலாளர், தோழர் முத்துக்குமார் அவர்களின் பேச்சு, காணொளி.

பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல், தலித் – இஸ்லாமிய – கிருத்துவ மக்களுக்கும் மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது!

    18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், வளர்ச்சியின்…

தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை என்ற பெயரில் புளித்துப் போன பின்நவீனத்துவ அடையாள அரசியலை புதிதாகக் கடைவிரிக்கும் பா.இரஞ்சித் & நீலம் கும்பல்!

ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை “தலித் வரலாற்று மாதம்” என்ற பெயரில் நீலம் அமைப்பு ‘கொண்டாடி’ வருகிறது. அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதத்தில் நீலம் அமைப்பின் “வேர்ச்சொல் இலக்கிய விழா”வில் கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள் என்ற தொணியில் ஷாலின் மரியா லாரன்ஸ் பேசியதும் அதைத் தொடர்ந்து அதற்கு பதிலாக ஆதவண் தீட்சன்யா…

மார்க்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த அமைப்பாளர்

பிரஞ்சு, ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலில் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புரட்சியாளர்களுடனும், அறிஞர்களுடனும் கம்யூனிஸ்ட் லீக் அமைக்கப்பட்டது. லண்டன், பாரிஸ், பிரஸ்ஸெல்ஸ் நகரங்களில் இதற்கு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1847 டிசம்பரில் கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு மார்க்ஸ்-எங்கெல்சிடம் வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களில் அவர்களிருவரும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தயாரித்தார்கள். மனித குல வரலாற்றில் தலைசிறந்த ஆவணமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848 பிப்ரவரியில் லண்டனில் வெளியிடப்பட்டது.

நவீன தாராளவாத தனியார்மயமாக்கலின் சரிவைப் பறைசாற்றும் தேம்ஸ் வாட்டர்!

ஏர்டெல் ஜியோ போன்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவரும் போது பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இன்றுவரை 4ஜி சேவை வழங்க அனுமதி வழங்கப்படாமல் முடமாக்கப்பட்டிருப்பதை நாம் கண்முன்னே காண்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் கால்களை உடைத்து தனியார நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் இந்தப் பாணியை மார்கரெட் தாட்சர் தொடக்கிவைத்திருக்கிறார்.

மே தின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – ஓசூர், திருச்சி

ஓசூரில் மே தின பேரணி! ஆர்ப்பாட்டம்! மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரில் மாலை 3.00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் அருகில், தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு பேரணி தொடங்கியது. 4.00 மணியளவில் ராம் நகர் அருகே பேரணி நிறைவுற்று, ஆர்ப்பாட்டம்…

பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதே இன்றைக்கு நமது முக்கிய கடமை!

காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டு மக்களின் மீது பாசிச சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று மட்டும் பார்ப்பது தவறு. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் என…

2024 – மே தினத்தில் உறுதியேற்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
கார்ப்பரேட் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்!

எமதருமை உழைக்கும் பாட்டாளி வர்க்கமே! மக்கள் சமூகமானது, சுரண்டுவோர் – சுரண்டப்படுவோர் என பிளவுபட்டதன் விளைவு, சுரண்டுவோரின் சொத்துக்கள் (மூலதனம்) பெருத்துக் கொழிப்பதும் சுரண்டப்படுவோர் வறுமையிலும் பட்டினியிலும் பெருகி வருவதும் நடந்தேறுகிறது. இவற்றை சமன்படுத்தும் முயற்சியாக, ஆட்சியாளர்கள் உறுதியேற்பதும் இயலாமல் போவதும் வழக்கமாகிவிட்டது. இதனால், பெரும்பான்மை உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு, உழைப்புக்கேற்ற கூலிக் கிடைக்காமல், சொற்பக்…