நீதித்துறையை காவிப் பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம்

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் (பகுப்பாய்வு பணி நிபந்தனைகள்) சட்டம் 2021-க்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்குப் பாசிசம் மோடி அரசு ஒத்துழைக்காமல் வாய்தா என்ற பெயரில் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடையும் தருவாயில் இச்சட்டத்திற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமென…














