வெற்றிகரமாக நடைபெற்ற தேர்தல் ஆணைய முற்றுகை!
SIR – தேர்தல் ஆணைய சதிகள்:
அம்பலமானது பாசிசக் கும்பல்
அடித்து வீழ்த்து!

கடந்த ஒருமாத காலமாகச் செய்து வந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இம்முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். - தேர்தல் ஆணைய சதிகள் தொடர்பான விவாதங்களே திட்டமிட்டு இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு வரும் வேளையில், திமுக எதிர் தவெக என்ற அரசியல், பற்றியெறியும் இப்பிரச்சனையை  மூடிமறைத்து வரும் வேளையில், எமது அமைப்புகள் நடத்திய இப்போராட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையதாக அமைந்தது

பத்திரிக்கைச் செய்தி

20.11.2026

மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் கடந்த ஒருமாத காலமாக மாநிலம் தழுவிய அளவில் வீதிவீதியாக மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக, 19.11.2026 அன்று சென்னை கோயம்பேட்டில் இருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது.

சரியாக 10.50 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகத் தொடங்கி, பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை வெற்றிகரமாக முற்றுகையிட்டோம். சிவப்புநிற உடையணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், செங்கொடிகள் என கோயம்பேடு பேருந்து நிலையமே கவனிக்கும்படி பேரணியானது கட்டுக் கோப்பாகவும், கம்பீரமாகவும் நடைபெற்றது. பேரணியின் கட்டுக் கோப்ப்பும் விண்ணதிரும் முழக்கங்களும் சுற்றியிருந்த நூற்றுக் கணக்கான மக்களை ஈர்த்தது.

“காவி பாசிசத்தின் கைப்பாவையான தேர்தல் ஆனையத்தைக் கலைத்திடு”, “ஓட்டுத் திருடன் ஞானேஷ் குமாரைக் கைதுசெய்”. “பாசிச மோடி-ஷா கும்பலைத் தூக்கியெறிவோம்” என்ற முழக்கங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்தது.

காலையிலிருந்தே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிசுத்துறை, பேருந்து நிலையத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே இருக்கும் சாலையைக் கடக்கவிடாமல் அங்கேயே கைது செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால், தோழர்கள் அம்முயற்சிகளை முறியடித்து வெற்றிகரமாக தேர்தல் ஆணையம் வரை முழங்கிக் கொண்டே சென்று முற்றுகையிட்டோம்.

போராட்டம் மக்களின் கவனத்தையும், ஈர்ப்பையும், ஆதரவையும் பெறுவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத போலிசுத் துறையோ, எமது அமைப்பின் மாநிலச் செயலாளர் முத்துக்குமாரையும் பிற நிர்வாகிகளையும் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விடாமல் தடுத்தனர். அச்சு, காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுப்பது, பேட்டி கொடுப்பதைச் சீர்குலைப்பது போன்றவற்றைச் செய்தனர்.

ஒரு அமைதியான முற்றுகைப் போராட்டம் மக்கள் கவனத்தைப் பெறுவதைக் கூட எல்லா வழிகளிலும் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று முழு மூச்சாகச் செயல்பட்டது, தமிழ்நாடு போலிசுத் துறை.

இவ்வகையில், கடந்த ஒருமாத காலமாகச் செய்து வந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இம்முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகள் தொடர்பான விவாதங்களே திட்டமிட்டு இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு வரும் வேளையில், திமுக எதிர் தவெக என்ற அரசியல், பற்றியெறியும் இப்பிரச்சனையை  மூடிமறைத்து வரும் வேளையில், எமது அமைப்புகள் நடத்திய இப்போராட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையதாக அமைந்தது என்றால் மிகையல்ல!

தகவல்
தோழர் முத்துக்குமார்,
மாநிலச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன