தங்க நகைக்கடன் தொடர்பான RBI-யின் புதிய வரைவு விதிகள்: மக்கள் மீது தொடுத்திருக்கும் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது முறைகேடுகளைச் செய்யும் வங்கி ஊழியர்களை தண்டிப்பதற்குப் பதிலாக…