செங்கனல்

செங்கனல்

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து குறைமின்கடத்திகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 1000 ஏக்கர் பரப்பளவில் குஜராத்தில் அமைக்கப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் மாநில அரசுடன் போட்டுள்ளது. 1.54 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) முதலீட்டில் அமைய உள்ள இத்தொழிற்சாலையில்  60 சதவிகித முதலீட்டை வேதாந்தாவும் 40 சதவிகித முதலீட்டை பாக்ஸ்கானும் முதலீடு செய்கின்றன. மேலும் …

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம் 2)

இரஞ்சித் கம்யூனிச விரோதி மட்டுமல்ல அம்பேத்கருக்கும் துரோகி

பா.இரஞ்சித் கம்யூனிச விரோத சிந்தனை கொண்டவர் என்பது ஒருபுறமிருக்கட்டும். அவர் உண்மையில் அம்பேத்கருக்கும் கூட நேர்மையானவர் அல்ல. தன் அடையாள அரசியலுக்கு அம்பேத்கரை ஒரு ஊறுகாயாகத் தொட்டுக் கொள்கிறார் அவ்வளவுதான். ஒரு ‘புரட்சிப் பெண்ணாக’ ‘அம்பேத்கரைட்’ஆகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரெனே-வின் கதாப்பாத்திரம், புத்தர் சிலைகள், படங்களை வைத்திருப்பவளாக, மாட்டுக்கறி …

உழைக்கும் வர்க்கத்தினரை கொலை செய்யும் இந்திய ஆளும் வர்க்கம்

2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் பிரிவினரே உள்ளனர். இதற்கு பிரதானக் காரணம் உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் மோசமான பொருளாதார நிலைமைகளே என்பது சொல்லாமலே விளங்கும். மறுபுறமோ இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நிதி/தொழில் நிறுவனங்களின் லாபம்/சொத்து மதிப்புகள் வரலாறு காணாத…

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில்  இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு.” என்ற காரணத்தை கூறி அதிரடியாக  மின் கட்டணத்தை …

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம்-1)

நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படம் வெளிவந்ததையொட்டி பல்வேறு விவாதங்கள் இணையவெளியில் கிளம்பியுள்ளன. ஒரே படத்தில் சாதிய எதிர்ப்பு, தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், திருநங்கைகளின் காதல், சாதிய ஆணவப் படுகொலை – என இவற்றையெல்லாம் இரஞ்சித் பேசியுள்ளதாகவும், அதனால் இப்படத்தை மிகப்பெரிய ‘புரட்சிப்’ படமாகக் கருத வேண்டும் எனவும் இரஞ்சித்தின் ரசிகர்களும் ‘தலித்திய அறிவுஜீவிகளும்’ கூறி வருகின்றனர். …

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில்…

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது என்று பெருமைக் கொள்கின்றன ஆளும் வர்க்க அறிவு அடிமைகளான …

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் துறையில் தொடரும் இலஞ்ச ஊழல் முறைகேடு!

பல்லிளிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு! ஏழை எளிய மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு அரசு வழங்கும் உணவு பொருள் மிக மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் சில நல திட்ட உதவிகளை பெறவும் அரசு வழங்கும் குடும்ப அட்டை முக்கியமானது. ஆனால் அந்த குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் இலஞ்சப் பணம் கொடுத்தால்தான் குடும்ப அட்டைக்கு…

கஞ்சிக்கு வக்கற்ற நாட்டில் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு வெற்று ஜம்பம்!

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை  செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் நமது நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடைய நாடாக மாறிவருவதற்கான சான்று இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று சிலாகித்-திருக்கிறார். இதன் நீளம் சுமார் 262 மீட்டரும், உயரம் சுமார்…

ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி

ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 80 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அதாவது இதன் மதிப்பு இந்திய ரூபாயில்…