செங்கனல்

செங்கனல்

இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்.

  காவி பாசிசம் மக்கள் மனதில் மதரீதியிலான பிரிவினையைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து வேலை செய்து வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் தொடர்களில் கூட அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடக்கிறது.…

உனக்கு சொந்தமா இல்லை எனக்கு சொந்தமா இந்த நிலம்
மக்கள் அதிகாரம் பாடல்

திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும்.

அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.

 

 

தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம்!

மே 1  உலகத் தொழிலாளர் தினம் பேரணி – ஆர்ப்பாட்டம் – ஓசூர்      அன்பார்ந்த தொழிலாளர்களே! உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் 1970களில் ஏற்பட்ட தேக்க-வீக்க நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளும் இன்று மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள், கட்டமைப்பு நெருக்கடிக்குள் உலக …

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த மாநில அரசு தற்போது கார்ப்பரேட்டுகளின் மிக முக்கியமான கோரிக்கையான தொழிலாளர் நலச் சட்ட …

நிலக்கரி திருடன் – கெளதம் அதானி!

ஹின்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானியின் முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செய்திகள் அன்றாடம்  வெளி வந்த வண்ணம் உள்ளன.  சமீபத்தில் மோடி அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற நிலக்கரி வயல்களின் சுரங்க ஏலத்தில், அதானி குழுமம் நடத்திய முறைகேடுகளை  ஸ்க்ரோல் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலக்கரி சுரங்கத் …

நீதித்துறையை மாற்றியமைக்கும் இஸ்ரேல் அரசு!
தொடரும் மக்கள் போராட்டங்கள்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறையினை மாற்றி அமைக்கும் மசோதாவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள், கடந்த ஒரு மாதமாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு எதிராக, முதலில் வார இறுதிநாட்களில் மட்டுமே போராடிய இஸ்ரேல் மக்கள், நெதன்யாகு மசோதாவை  திரும்ப பெற மறுக்கவே, எல்லா …

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.

ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தினார்கள். அதனைப் பயன்படுத்தி பாசிசப் படைகளைக் கட்டினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் தனது …

ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!

அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டதற்கு “ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்றார் மோடி. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ, வருமானவரித்துறை, ஆளுநர் மாளிகை போன்றவைகளெல்லாம் எதிர் கட்சிகளை முடக்குவதற்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு “பல பத்தாண்டுகளாக ஊழலின் மூலம் பயன் பெற்றவர்கள் …

ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில்  ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டதால் அதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டங்களினால் சென்ற ஆண்டு இலங்கையே குலுங்கியது. இதை தொடர்ந்து, கோத்தபய இராஜபக்சே பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஆட்சி மாறினாலும் இலங்கை மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. இன்னும் அதிகரிக்கவே செய்கின்றன.…