மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கோவை பகுதியில் மட்டும் நாள்…










