செங்கனல்

செங்கனல்

டிரம்பை ஆதரிக்கும் வால்ஸ்டிரீட்
நிதிமூலதனச் சூதாடிகள்

அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் இச்சாதனைக்குச் சொந்தக்காரர். ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக தனது நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு செய்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டு …

பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

  நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன்…

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

 

 

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் இதற்காக தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் …

கங்கனா ரனாவத் கன்னத்தில் விழுந்த அறை : குல்விந்தர் கவுர் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்!

 

 

“100 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பெண்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்று கங்கனா சொன்னார். என் அம்மாவும் அந்த போராட்டத்தில்தான் இருந்தார்”

  • குல்விந்தர் கவுர் (கங்கனா ரனாவத்தைக் கன்னத்தில் அறைந்தவர்)

சண்டிகர் விமான நிலையத்தில் குலவிந்தர் கவுர் என்னும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காவலர், ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் நாடாளுமன்ற …

பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான அபாயம் நெருங்குகிறது!

 

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாசிச மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனப் பிரச்சாரம் செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவு தொகுதிகளில் கூட வெற்றி …

கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

 

 

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்தக் கலவரமானது எல்லோரும் கூறுவது போல இரண்டு இனங்களுக்கு இடையிலான பகைமையினால் உருவான கலவரம் அல்ல. இது, இயற்கை வளம் கொழிக்கும் மணிப்பூரின் வனப்பகுதிகள் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித தடையும் இன்றி கைப்பற்றிக் கொண்டு கொள்ளையடிப்பதற்காக, பார்ப்பன இந்துத்வ பாசிச கும்பல் திட்டமிட்டு …

மறுகாலனியாக்கத் திணிப்பும்! நீளும் நீட் – கியூட் தேர்வுகளும்!

  பள்ளிப்படிப்பை முடித்து, குறிப்பாக, மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கனவை எட்ட முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் – கியூட் போன்ற தேசியத் தேர்வுகள் அனைத்தையும் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டவைகளாக மாற்றும் என அறிவித்துள்ளது. ஆனால், இவைகளை ரத்து செய்வோம் என்றோ, கல்வி அனைத்தையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றோ…

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான…

அதானிக்காக இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு!

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்த காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது. இத்தாக்குதலில் இதுவரை 35000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 79000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பத்திரிக்கைகள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய காஸாவில் உள்ள நுசெரேட் அகதி முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடுத்துள்ளது. வடக்குப்பகுதியில் உள்ள ஜபலிய அகதி முகாமை …