வங்கதேசம் – ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?
கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழலாமா?

வங்கதேசத்தில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த பாசிஸ்டான ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் விசுவாசியான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மாணவர் எழுச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என …