செங்கனல்

செங்கனல்

100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

நவீன தாராளவாத கொள்கைகளை கொண்டுவந்த போது அந்நிய முதலீடுகள் பெருகும் தொழில்துறை வளர்ச்சியடையும் இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் என்று கதையளந்தார் மன்மோகன் சிங்.

அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் சொன்னது பொய் என நிரூபனமானது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகுவதோ, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றமோ ஏற்பட்டுவிடவில்லை மாறாக …

வெடித்து கிளம்பும் தொழிலாளர்கள் போராட்டங்கள்! அடக்குமுறைக்கு தயாராகும் பிரிட்டன் அரசு!

பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சம்பள குறைப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், மின்வெட்டு, எரிசக்தி பற்றாக்குறை என பிரிட்டன் மக்கள் சில ஆண்டுகளாகவே அவதியுற்று வருகின்றனர்.  இந்த நிலை உக்ரைன் போருக்குப் பிறகு இன்னமும் மோசமாகிவிட்டது.

இதன் காரணமாக பிரிட்டன் முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக சுகாதாரத் …

வேலையிழப்பும், வேலையில்லாத் திண்டாட்டமும் முதலாளித்துவத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்

ஐ. டி. துறையில் ஆட்குறைப்பு சம்பந்தமான செய்திகள் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக Meta (Facebook), Amazon, Twitter, இன்னும் பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செலவினங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை மிகவும் ‘நாகரிகமாக’  Cost Cutting என்று கூறி வருகின்றனர். பொதுவாக Layoff என்பது,…

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

  பத்திரிக்கை செய்தி 14-12-2022 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே, ஜனநாயக சக்திகளே! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு கடந்த 10-12-2022 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் 09-12-2022 அன்று காலை 10.52 மணிக்கு 93600 57937 என்ற எண்ணிலிருந்து மக்கள் அதிகாரம்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள்.

மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது அதை அந்நிய படையெடுப்பாளர்கள் சிதைத்துவிட்டார்கள் என வரலாற்றை புரட்டியும் அவர்கள் கூறும் …

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய  நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு …

இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

அனைவரும் தங்களது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உரிமை வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் அனைத்து இடங்களிலும் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின்.

 

 

ஆனால் நம் நாட்டில் மற்ற எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமைகளையும் பறித்து இந்தியை நம் மீது திணிப்பதற்கான முயற்சி கிட்டத்தட்ட ஒரு …

பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும் சனாதன சாதிய ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் காவிப் பாசிச கும்பல், தேர்தல் வந்துவிட்டால் …

பங்குச் சந்தை முதலீட்டு மோசடி நிதி நிறுவனங்கள் – யார் குற்றவாளி?

பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் என்றாலே மோசடி நிறுவனங்கள்தான் இதில் என்ன புதிது என்று நினைக்கலாம், ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துதரும் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைப் போல் இல்லாமல் தற்போது புதியவகை மோசடி நிறுவனங்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளன. வழக்கமாக வங்கிகள் மூலமாகவோ, முதலீட்டு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மூலமாகவோ பங்குச் சந்தையில் …