செங்கனல்

செங்கனல்

பரந்தூர் விமான நிலையம் – தமிழக மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் இவ்விமான நிலையம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தாங்கள் இக்கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுவோம் எனவும் கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக …

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வந்தனர் விசைத்தறி உரிமையாளர்கள். தற்போதைய மின் கட்டண …

மருந்து, மாத்திரைகள் தனியார்மயம்: இதை வாங்க பணம் இல்லையேல் மக்கள் பிணம்:

டோலோ 650 மி.கி. மாத்திரையை அதிக அளவில் பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு ரூ 1000 கோடி வரை இலவசங்கள் என்ற பெயரில் இலஞ்சம் கொடுத்துள்ளது மைக்ரோ லேப்ஸ் என்ற நிறுவனம் என்ற செய்தி பரவலாகப் பேசப்படுவதை அறிவோம்.

அனைவரும் அறிந்த  மேற்கண்ட இரகசியத்தை வருமான வரித்துறை புதியதாக கண்டுபிடித்துவிட்டதாக வானத்திற்கும் ,பூமிக்கும் குதிக்கிறது. நேரடி வரிகள் வாரியமோ …

விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்

 

 

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் …

இஸ்லாமிய அமைப்புகள் மீது நாடு முழுவதும் தொடுக்கப்படும் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

    ஒன்றிய பாஜக அரசின் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை), இஸ்லாமிய அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளின் அலுவலகங்கள் மீது ரெய்டு நடத்திக்கொண்டும் மற்றும் அதன் தலைவர்களை கைது செய்துகொண்டும் உள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம். (22-09-2022) அன்று நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ, பி…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து குறைமின்கடத்திகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 1000 ஏக்கர் பரப்பளவில் குஜராத்தில் அமைக்கப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் மாநில அரசுடன் போட்டுள்ளது. 1.54 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) முதலீட்டில் அமைய உள்ள இத்தொழிற்சாலையில்  60 சதவிகித முதலீட்டை வேதாந்தாவும் 40 சதவிகித முதலீட்டை பாக்ஸ்கானும் முதலீடு செய்கின்றன. மேலும் …

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம் 2)

இரஞ்சித் கம்யூனிச விரோதி மட்டுமல்ல அம்பேத்கருக்கும் துரோகி

பா.இரஞ்சித் கம்யூனிச விரோத சிந்தனை கொண்டவர் என்பது ஒருபுறமிருக்கட்டும். அவர் உண்மையில் அம்பேத்கருக்கும் கூட நேர்மையானவர் அல்ல. தன் அடையாள அரசியலுக்கு அம்பேத்கரை ஒரு ஊறுகாயாகத் தொட்டுக் கொள்கிறார் அவ்வளவுதான். ஒரு ‘புரட்சிப் பெண்ணாக’ ‘அம்பேத்கரைட்’ஆகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரெனே-வின் கதாப்பாத்திரம், புத்தர் சிலைகள், படங்களை வைத்திருப்பவளாக, மாட்டுக்கறி …

உழைக்கும் வர்க்கத்தினரை கொலை செய்யும் இந்திய ஆளும் வர்க்கம்

2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் பிரிவினரே உள்ளனர். இதற்கு பிரதானக் காரணம் உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் மோசமான பொருளாதார நிலைமைகளே என்பது சொல்லாமலே விளங்கும். மறுபுறமோ இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நிதி/தொழில் நிறுவனங்களின் லாபம்/சொத்து மதிப்புகள் வரலாறு காணாத…

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில்  இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு.” என்ற காரணத்தை கூறி அதிரடியாக  மின் கட்டணத்தை …