Author: செங்கனல்

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் – வெளியீடு – முன்னுரை

‘‘கல்வி, எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. ஏனெனில் நிகழ்காலத்தில் தயாராக இருக்கும் ஒருவருக்குத்தான் எதிர்காலம் சொந்தமாகும் என்றார் கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அதனால்தான் நாட்டின் எதிர்காலம், இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது எனக் குறிப்பிடுகிறோம். கல்வி என்பது வெறும் செய்திச் சேகரிப்பல்ல! அது…

பொது சிவில் சட்டம் – காவிகளின் தேர்தல் நாடகம் ஆரம்பம்

உத்ரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்துத்துவப் பாசிசத்தின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற “பெருமையை” உத்ரகாண்ட் மாநிலம் அடைந்துள்ளது. நாடாளுமன்றத்…

பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மோடி, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம் என்று…

பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

போபர்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், சோலார் பேனல் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல் என அனைத்தையும் முன்னிறுத்தி மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் ஆட்சிக்கு…

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு…

தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை – வெளியீடு

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கடந்த வெள்ளியன்று (02/02/2024) சேலம் மாநகரில், மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பாக ஒரு கண்டனக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் “தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை” என்ற தலைப்பில் மக்கள் கல்விக்…

அரசு போக்குவரத்து தொழிலாளார்களை நம்பவைத்து கழுத்தறுத்தது
திராவிட மாடல் ஸ்டாலின் அரசு!

அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய ஊதிய உயர்வைப் பெறுவதற்குக் கூட மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தமிழ்நாடு…

இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதி முழுவதும், இஸ்ரேலின் ஏவுகணைகளால் துளைக்கப்பட்டு, சிதைந்துபோய்க் கிடக்கிறது. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக கொன்றழித்து…

கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம்…