செங்கனல்

செங்கனல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தபாடி கிராமத்தில் காலங்காலமாக சாலை ஓரங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் அவல நிலை.

வல்லரசாக வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறும் நமது நாட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லாமல் பிணங்களை எரிப்பதும், புதைப்பதும் சாலை ஓரமே நடைபெற்று வருகிறது. இது குறித்து ஊர் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், போராடியும் வந்துள்ளனர். ஆனால் அரசோ கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. முதலாளிகள் நலன் என்றால் ஓடோடி சேவை…

இந்துராஷ்டிரத்திற்குள் பழங்குடியினரை இழுக்கும் பாசக் கயிறு.

இந்தியாவின் 15வது அரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ளார். அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஆரம்பத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது. முர்முவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள்…

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிதல்களை மோடி அரசு 2017ம் ஆண்டில் அறிவித்தபோது அதில் கல்வி தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக புகுத்தப்பட்டதுதான் மூக்ஸ் (Massive open online course), இதன் படி நம் நாட்டின் உயர்கல்வித் துறையில் கல்லூரிப் பாடங்களை இணையவழியில் கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு,…

தோழர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர்.கணேசன்(எ) அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி பல தடைகளை கடந்து தர்மபுரியில் இன்று 17.07.2022 சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28.06.2022 அன்று தோழர்.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். தோழரின் அர்ப்பணிப்பு தியாகத்தை போற்றுகின்ற வகையில் குறிப்பாக நக்சல்பாரி மண்ணில் தோழர்.கணேசனின் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தருமபுரி நகரில்…