செங்கனல்

செங்கனல்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்.

டிகர் விஜய், கரூர் நகரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கின்றனர். அதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கியிருக்கும் இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு எல்லா கட்சியினரும் இறந்தவர்களது உறவினர்களுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்திருக்கின்றனர். …

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத்  தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும், விருப்பத்தையும் இணைக்கும் நூலாகவும் உள்ளது. இருப்பினும், இன்று, இந்த உயிர்நாடி வேகமாக உடைந்து…

ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப்  பார்த்திருப்போம். கண்கலங்கியிருப்போம்.

இக்காட்சிகளில் சிறிது உண்மை இருந்தாலும், மிகவும் பிற்போக்கான இந்திய சமூக-குடும்ப உறவுகளைஅழகானதாகவும் …

“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் …

தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு

கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம் காணொளியும், செய்தியும் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அரசின் மனிதநேயமற்ற தன்மையையும், அதன் நோக்கத்தையும்…

உமர்காலித் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணை மறுப்பு: காவி பாசிஸ்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் தில்லி உயர்நீதிமன்றம்

CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது.  இவர்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

பிணைக் கேட்டு கடந்தாண்டு ஜூலையில் …

நேபாளம்: ஜென் – ஜி தலைமுறையின் போராட்டப் பலனை கொத்திச் செல்லக் காத்திருக்கும் வல்லூறுகள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நேபாள அரசு முகநூல், வாட்ஸாப், எக்ஸ், யூடியூப், ரெட்டிட் உள்ளிட்ட 26 முக்கியமான சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்தச் சிறு நெருப்பு பெரும் போராட்டத் தீயாகப் பற்றிக் கொண்டது. 

செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தலைநகர் காத்மண்டுவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் இளைஞர்கள் மாணவர்கள் போராட்டம் …

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் பாஜக ஆதரவு பேச்சாளர்கள், சமூக ஊடகக் கையாட்கள் வரை அனைவரும் மோடி அரசின் …

சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டைத் திணித்து நீட் தேர்வை நிரந்தரமாக்கி…

GST வரி குறைப்பு: மக்கள் மீதான அக்கறையா? அல்லது உள்நாட்டுத் தேவை தேக்கநிலை காரணமா?

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற மூன்று வரி அடுக்குகளாக மாற்றியுள்ளனர். மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு (400 பொருட்கள்) நிர்ணயிக்கப்பட்டிருந்த …