செங்கனல்

செங்கனல்

பட்ஜெட்டில் உணவு மானியம் குறைப்பு: மக்களை பட்டினியில் தள்ளும் மோடி-அமித்ஷா கும்பல்

இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான CII பட்ஜெட் குறித்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி “தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் தான் இது” என்று முதலாளிகளின் மத்தியில் பேசி இருக்கிறார்.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48 …

ஆனந்த் அம்பானியின் திருமணம் – மக்களின் வறுமையை ருசிக்கும் வக்கிரமே!

 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் (என்கோர் ஹெல்த் கேரின் நிறுவனரான வீரேன் மெர்ச்சன்ட் – சைலா மெர்ச்சன்ட் மகள்) திருமணமானது, அதாவது, திருமணம் என்ற பெயரில் அரங்கேறிய வக்கிரமானது, கடந்த மார்ச்சில் தொடங்கி நலங்கு – சங்கீத் – மெஹந்தி – ஹல்தி …

மின்துறை தனியார்மயமாவதைத் தடுக்காமல்,
கட்டண உயர்வைத் தடுக்க முடியாது

 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் 26.73 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டும் 2.18 சதவீதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வை மட்டும் தமிழக அரசே …

எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடும்
வங்காளதேச மாணவர்கள்!

நடப்பில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு வார காலமாக வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில்  படிப்படியாக மற்ற கல்வி நிலையங்களும் பங்கெடுக்க, அது நாடு தழுவிய மாணவர்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இப்போராட்டத்தினை தடுப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளை …

மறுகாலனியாக்கத்தை மறுதலிக்காமல், மாநில மக்களின் வேலை வாய்ப்பு என்பது வெற்றுக் கனவே!

தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில், சொந்த மாநில மக்களுக்கு, 100% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிற மசோதாவை, கர்நாடகப் பேரவையில் கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 15-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இம் மசோதாவானது, ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படித்தவர்கள், கன்னடம்…

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் குண்டர் படையால் கொல்லப்பட்டவர்களை, யாரும் தாக்கவில்லை என்றும் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் கூறியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றி வந்த குட்டு கான், சாந்த் மியா கான், மற்றும் …

ஜப்பான் வங்கியின் கட்டுப்பாட்டில் இந்திய ரயில்வே
பாசிச மோடியின் ஆட்சியில் துரிதமாகும் மறுகாலனியாக்கம்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, ரயில்வே துறை குறித்துப் பேசிய போது, பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தி பயண நேரத்தை குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். இதற்கென 2023ம் …

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக தலைமையில் போட்டியிட்ட ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் …

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15.64% வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க., மோடி எதிர்ப்பலை வீசியதாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட…