செங்கனல்

செங்கனல்

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள்  இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப் போராட்டத்தை சாதி ஒழிப்பிற்கு எதிரானதாக நிறுத்தும் இந்த வேலையை, பெரும்பாலான சமயங்களில்  தலித்திய …

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் யாருக்கானது?

கடந்த வியாழக்கிழமை (21.08.2025) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை கூடகோவில் அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்கு முன்பு 27.10.2024 அன்று முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமம், விழுப்புரத்திலும், 2024-ஆம் ஆண்டு இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே சென்னை பனையூரிலும், இராசிபுரம், நாமக்கல் கிழக்கிலும், 28.03.2025…

ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து வைத்தனர், தாயின் மீது வழக்குப் பதிய வைத்தனர் என்பதையும்; இந்த குறைந்தபட்ச நடவடிக்கை…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம்.

அதைப்போலவே ஏப்ரல் வந்தாலே தனியார் கல்லூரி முதலாளிகளுக்கும் கொண்டாட்டம் தான். தங்களது கல்லூரிகளில் நூறு …

தி வயர் ஆசிரியர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அசாம் போலிசின் தேச துரோக வழக்கு!

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு! புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம் பத்திரிகை செய்தி 20-08-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே! நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த இணைய தளத்தை தொடர்ந்து ஒடுக்கிவருகிறது பாசிச மோடி அரசு. அந்த வகையில் கடந்த…

தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது. இன்றோ, அந்த வாக்குறுதிக்கு வாய்க்கரிசிப் போட்டு, அதிமுக விட்டு வைத்த மீதமுள்ள 4…

காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை: அறிவுத்துறையினர் மீது காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்!

மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து வந்த சட்டப் பிரிவான 370 மற்றும் 35(A)  இரண்டையும் இரத்து செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இச்சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த  ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரின் உள்துறை அமைச்சகம்  25 புத்தகங்களை தடை செய்வதாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிலுள்ள …

மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்கும் காவி பாசிஸ்டுகள்!

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தர்திபூர் கிராமத்தை சார்ந்த நசிமுதீன் என்பவர் புலம் பெயர்ந்து மும்பையின் நாலசோபரா பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு  ரூ.1300 தினக்கூலியை சம்பளமாக பெற்ற அவர்  ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் போலீசாரால் போலீசு நிலையத்திற்கு …

வலைதள ரீல்ஸ்களில் எதிர்காலம்
வளரும் இளைய சமுதாயம் சீரழிவதை அனுமதிக்கலாமா?

அண்மைக் காலமாக துளிர்கள் முதல் முதியவர்கள் வரை ரீல்ஸ் (குறுகிய வீடியோ) மோகம் வேகமாகப் பரவி, பெரும்பான்மையினர் அதற்கு அடிமையாகி, பலியாகி வருவதை அனைவரும் அறிவோம். பிரபலம் தேடும் நோக்கத்திற்காக தாங்கள் செய்யும் சேட்டைகளை, ஆபத்தான, ஆபாசமான, அசிங்கமான நிகழ்வுகளைக் கைப்பேசி மூலம் படமெடுத்து, அதை அவரவர் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் என்ற பெயரில்…