ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி, அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம்
📅 நாள்: 09.08.2026
⏰ நேரம்: மாலை 3:00 முதல் 7.00 வரை
📍 இடம்: ஆந்திர சமிதி சபா, ஓசூர்.
📋 நிகழ்ச்சிநிரல்
தலைமை: தோழர். இரா. சங்கர் – மாவட்டச் செயலாளர் (பு. ஜ. தொ. மு)
🎤 உரையாற்றுவோர்:
- 1. தோழர் சந்தோஷ் – மாவட்டச் செயலாளர் (த. தொ. மு)
- 2. தோழர் வனவேந்தன் – மாவட்டத் தலைவர் (தி. க) ஒசூர்
- 3. தோழர் M. வெங்கடேஷ் – வழக்கறிஞர், இணைச்செயலாளர், ஒசூர் வழக்கறிஞர்கள் சங்கம்
- 4. தோழர் க. இரா. தமிழரசன் – தலைமைக்குழு உறுப்பினர், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்
- 5. தோழர் ஜே. அதிரூபன் – பொது செயலாளர், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம்
- 6. தோழர் இ. கோ. வெங்கடேசன் – பு. ஜ. தொ. மு, ஒசூர்
- 7. தோழர் சுந்தரம் – செயலாளர், ஓசூர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஒசூர்
- 8. தோழர் முரளி – வழக்கறிஞர், புரட்சிகர மக்கள் அதிகாரம்
- 9. தோழர் இரவிச்சந்திரன் – மாவட்டத் தலைவர், பு. ஜ. தொ. மு
🎯 சிறப்புரை: தோழர். பாலன், வழக்கறிஞர், பெங்களூர் உயர் நீதிமன்றம் – IFTU மாநில தலைவர், கர்நாடகா.
- 🎭 தப்பாட்டம்: விடியல் கலைக்குழு
- 🎨 புரட்சிகர கலைநிகழ்ச்சி: புரட்சிகர மக்கள் அதிகாரம்
🙏 நன்றியுரை: தோழர். இரவிச்சந்திரன் – இணைச்செயலாளர் (பு. ஜ. தொ. மு)
அன்பார்ந்த தொழிலாளர் தோழர்களே! உழைக்கும் மக்களே!
✦ இந்தியாவில் மாபெரும் சுரண்டல் வடிவமாக உருவெடுத்துள்ள ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை’ உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழித்து வருகிறது.
✦ இலாப வெறி பிடித்த முதலாளித்துவமும், அதற்குத் துணை போகும் மோடி அரசும் தொழிலாளர்களை வெறும் உற்பத்தி செய்யும் உயிருள்ள இயந்திரங்களாக மட்டுமே பார்க்கின்றன. இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
✦ ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் எந்தவித முன்னறிவிப்போ, முறையான காரணமோ இன்றி தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கலாம் என்ற நிலை உள்ளதால், வேலை பறி போய்விடுமோ என்ற பயத்தில் நிறுவனத்துக்கு எதிராக குரல் எழுப்பாமல் கொடுக்கும் வேலையைக் கொத்தடிமையைப் போல செய்து வருகின்றனர். இந்த ஒப்பந்த தொழிலாளர் முறை ஐ.டி நிறுவனங்கள் தொடங்கி சிறு குறு நிறுவனங்கள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
✦ 8 அல்லது 11 மாதங்கள் அல்லது தேவைப்படும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதால், அந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்ற பயத்துடனேயே தொழிலாளர்கள் வாழ வேண்டியுள்ளது.
✦ ஒரே நிறுவனத்தில், ஒரே மாதிரியான வேலையைச் செய்யும் நிரந்தரத் தொழிலாளருக்குக் கிடைக்கும் ஊதியத்தில் பாதி அல்லது அதற்கும் குறைவாகவே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
✦ தாங்கள் பணியாற்றும் நிறுவனம் வழங்கும் தொகையில் பெரும் பகுதியை ஒப்பந்ததாரர்கள் (Contractors) கமிஷனாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள மிகக் குறைந்த தொகையையே தொழிலாளர்களுக்குத் தருகிறார்கள், அதையும் கூட மாதந்தோறும் சரியாக வழங்குவதில்லை.
✦ பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் மருத்துவக் காப்பீடு (ESI) பிடித்தம் செய்யப்பட்டாலும், அது அரசாங்கக் கணக்கில் முறையாகச் செலுத்தப்படாமல் நிறுவனமே வைத்துக் கொள்கிறது.
✦ ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, பண்டிகை கால விடுப்புகள் போன்ற விடுப்பு உரிமைகள் இல்லை. சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ், கிராஜுவிட்டி, ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
✦ இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை என்பது காகிதத்தில் மட்டுமே இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள், ஆனால் அதற்கான முறையான இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படாமல் கடுமையான உழைப்புச் சுரண்டலும் மன அழுத்தமும் திணிக்கப்படுகிறது.
✦ கடினமான, ஆபத்தான மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் செய்ய மறுக்கும் வேலைகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் கடும் விபத்துகளைச் சந்திக்கின்றனர், உடல் உறுப்புகளை இழப்பது தொடங்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.
✦ ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றும் ஆண்கள் வர்க்க ரீதியாக மட்டுமே சுரண்டப்படுகிறார்கள். ஆனால் பெண்களின் நிலை அதைவிடக் கொடுமையானது, பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தொடங்கி அத்தனை ஒடுக்கு முறைகளும் அவர்கள் மீது ஏவப்படுகிறது.
✦ இதன் விளைவாக ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் நிரந்தர வருவாய் இன்றி தங்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஈடேற்றிக் கொள்ள முடியாமல் பெரும் நெருக்கடியில் சிக்கி அவர்களின் சமூக வாழ்வியல் கேள்விக்குள்ளாகி வருகிறது. ஏறி வரும் விலைவாசி, தொடர்ந்து வரும் சமூக நெருக்கடிகள் அவர்களைப் பஞ்சை பராரிகளாக ஆக்குவதாக உள்ளது.
✦ கார்ப்பரேட் நிறுவனங்களும் அதற்கு அடியாளாகச் செயல்படும் மோடி அரசும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி சங்கம் வைக்கும் உரிமையை ஏறத்தாழ இல்லாமல் செய்திருக்கின்றனர். இதனால் தங்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாமல் தங்கள் மீதான ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்கின்றனர் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். அதையும் மீறி கேட்டால் உடனடியாக வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர்.
✦ நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை. எனவேதான் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒப்பந்ததாரர்களும் லாபத்தைப் பெருக்கிக் கொடுக்கும் இந்த “நவீன கால அடிமை முறையை” தங்கள் நிறுவனங்களில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த நவீன கால அடிமை முறையான ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.
✦ தொழிலாளர்களின் உரிமைகள், பணியிட பாதுகாப்பு, ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டிருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் பாசிச பாஜக அரசால் திருத்தப்பட்டு வெறும் நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்டு விட்டதால், நிரந்தர தொழிலாளர்களும் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போன்றதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
✦ தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதற்காக முந்தைய திமுக அரசை அகற்றிவிட்டு அந்த இடத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை அமர வைத்திருக்கின்றனர். ஆனால் முந்தைய ஆட்சியை விட இன்னும் கூடுதலாக தனியார் மயத்தை நோக்கித்தான் இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ கட்சிகள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார் மயமும் அதன் பகுதியான ஒப்பந்தத் தொழிலாளர் முறையும் தொடரத்தான் செய்யும்.
✦ ஒப்பந்த தொழிலாளர் முறையால் நிரந்தர வேலை பறிக்கப்படுவதால் திருமணம் ஆகாத இளைஞர்கள் சாராயம், கஞ்சா, ஆன்லைன் சூதாட்டப் போதைக்கு அடிமையாக்கப்பட்டு சமூக சீர்கேடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உள்ள இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து கட்டுவோம்!
✊ ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட – நிரந்தர தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒரே வர்க்கமாக அணிதிரள வேண்டும்!
🏛️ இந்திய / தமிழக அரசுகளே!
- ✦ ஒப்பந்தத் தொழிலாளர் முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.
- ✦ ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரியும் அனைத்து தற்காலிக தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
- ✦ நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியமும், இதர சலுகைகளும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
- ✦ அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), மற்றும் முறையான விடுப்பு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
📢 புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
📞 செல்: 9025213374 – ஓசூர்
📢 தமிழகத் தொழிலாளர் முன்னணி
📞 செல்: 9095513595 – ஓசூர்


