பத்திரிக்கைச் செய்தி – ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கு – கருத்தரங்கம்
ஓசூரில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்க கோரி 09.08.2026 அன்று மாலை 3:00 மணிக்கு ஆந்திர சமிதி சபாவில் கருத்தரங்கம் நகர காவல் ஆய்வாளரின் அச்சுறுத்தலை மீறி சிறப்பாக நடைபெற்றது.
- தோழர்.இரா.சங்கர் மாவட்டச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார்.
- தோழர்.சந்தோஷ் மாவட்டச்செயலாளர், தமிழகத் தொழிலாளர் முன்னணி அவர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஏன் ஒழிக்க வேண்டும் என்றால் இளம் தொழிலாளர்கள் மத்தியில் முதலாளிதத்துவம் சமூக சீர்கேட்டை பரப்பி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை தீவிரப்படுத்துவதை முறியடிக்க வேண்டும் என்பதைக் விவரித்து பேசினார்.
- தோழர்.அதிரூபன், வழக்கறிஞர், தமிழ்நாடு தொழிற்சங்க நtuவம் அவர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பதற்கு சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் சட்டங்கள் இருந்தும் ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்படவில்லை. அதற்கு மக்கள் எழுச்சி தான் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கும் என்பதை விளக்கி பேசினார்.
- தோழர்.சுந்தரம், பொதுச்செயலாளர், ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு அவர்கள் தொழில் வளர்ச்சி நவீன எந்திரங்கள் மூலம் எளிய முறையில் உற்பத்தியை அதிக அளவில் செய்ய முடிகிறது. இந்நிலையில் 8:00 மணி நேர வேலைக்கு பதிலாக 6 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்தவும் ஒப்பந்த தொழிலாளர்களை கட்டாயமாக நிரந்தரப்படுத்த வேண்டும். அதேபோல உரிமைக்காக போராடுகின்ற தொழிலாளர்களையோ தொழிற்சங்க பிரதிநிகளையோ முதலாளி வேலை விட்டு நீக்கினால் அவர்களுக்கு கடுமையான தண்டனையை ஏற்படுத்தும் வகையில் வேலை நீக்க தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை விவரித்து பேசினார்.
- தோழர். க.இரா.தமிழரசன், தலைமைக்குழு உறுப்பினர், தமிழ்த்தேச குடியரசு இயக்கம் அவர்கள் இன்றைக்கு வேலை வாய்ப்பு என்பது மிக மோசமான நிலையில் இருக்கிறது. இருக்கின்ற ஒப்பந்த வேலையாவது கிடைக்குமா என்ற நிலையில் ITI, டிப்ளமோ,இன்ஜினியரிங் முடித்தவர்கள் வேலை தேடி அலைகின்ற அவல நிலையை விலக்கி அதனைப் போக்க தொழிலாளி வர்க்கம் ஓரமைப்பாக திரண்டு செயல்பட வேண்டும் என்பதை விளக்கி பேசினார்.
- தோழர்.முரளி, வழக்கறிஞர், புரட்சிகர மக்கள் அதிகாரம் அவர்கள் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக காரல் மார்க்ஸ் எப்படி அயராது உழைத்தாரோ அதை போல் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
- தோழர்.வனவேந்தன், மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம் அவர்கள் நிரந்தர தொழிலாளருக்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் அந்த ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக குரல் கொடுப்பதில்லை என்பதை ஆதங்கத்துடன் விளக்கி பேசினார்.
- சிறப்புரையாக தோழர்.பாலன், வழக்கறிஞர், பெங்களூர் உயர்நீதிமன்றம் IFTU மாநில தலைவர், கர்நாடகா அவர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு சங்கம் அமைப்பதிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் இந்தியாவில் ஒப்பந்தத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் எதற்காக என்றால் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம், போனஸ், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பெறுவதற்கு சட்டத்தையும் பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தை உணர்வூட்டி போராடி வைப்பதன் மூலம் தான் இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும் என்பதை பல்வேறு போராட்ட அனுபவங்களை விவரித்து தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வர்க்க உணர்வூட்டும் வகையில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
- தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட இனச் செயலாளர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் சிறப்பாக முடிக்கப்பட்டது.
இக்கருத்தரங்க நிகழ்ச்சின் இடையே விடியல் கலைக்குழுவின் தப்பாட்டம் வந்திருந்த தோழர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் கலைக்குழு தோழர்களின் பாடல் வந்திருந்தவர்களுக்கு புரட்சிகர உணர்வூட்டும் வகையில் அமைந்தது. இக்கருத்தரங்களுக்கு வருகை தந்த மாற்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் தொழிலாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துச் சென்றனர்.
தகவல்:
இரா.சங்கர்.
மாவட்டச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர், முன்னணி,
ஓசூர்.
செல்:9025213374
தோழர்.சந்தோஷ்.
மாவட்டச்செயலாளர்,
தமிழகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர்.
செல்:9095513595












தோழர் பாலன் ஹரிதாஸ் அவர்களுக்கு அனுப்பக்கூடிய செய்தி:
பொருள்: மேடை முழக்கமும் நிஜ நிலைமையும் — TCL தொழிற்சங்கத்தில் புதிய உறுப்பினர்களை மறுப்பது குறித்த உங்களது மௌனம் ஏமாற்றமளிக்கிறது!
தோழர் பாலன் ஹரிதாஸ் அவர்களுக்கு,
வணக்கம். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பது பற்றியும், தொழிலாளி வர்க்கத்தை உணர்வூட்டி அணிதிரட்டுவது பற்றியும் மேடைகளில் தாங்கள் பேசும் பேச்சுக்கள் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகத்தான் இருக்கின்றன.
ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன?
ஒன்றிய மறுப்பும் வர்க்கப் பார்வையும்: Federation of Tata Communications Employees தொழிற்சங்கம் புதிய தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று மேடையில் பேசிவிட்டு, நடைமுறையில் தொழிலாளர்களைச் சேர்க்க மறுக்கும் ஒரு தொழிற்சங்கத்தைப் பற்றி உங்களிடம் சுட்டிக்காட்டியபோது, அது குறித்து எவ்வித உணர்வும் இல்லாமல், வழிகாட்டுதலும் இல்லாமல் தாங்கள் கடந்து சென்றது மிகுந்த வருத்தமளிக்கிறது.
வழக்கறிஞராகவும் அமைப்பராகவும் மௌனம்: இந்த TCL தொழிற்சங்கத்திற்காக W.P. No. 9937 வழக்கில் தாங்கள் ஆஜராகி வாதாடியுள்ளீர்கள். அந்த வகையில், இத்தொழிற்சங்கத்தின் நிர்வாகப் போக்கையும், அது புதிய உறுப்பினர்களைச் சேர்க்காமல் தொழிலாளர் நலனுக்கு எதிராகச் செயல்படுவதையும் தட்டிக் கேட்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
பேச்சும் செயலும்: மேடையில் ஒரு பேச்சும், நடைமுறையில் பாதிக்கப்பட்ட தொழிலாளி வந்து முறையிடும்போது மற்றொரு போக்கும் இருப்பது வர்க்க உணர்வுக்கு அழகல்ல.
TCL தொழிற்சங்கம் ஏன் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க மறுக்கிறது என்ற கேள்வியை அதன் நிர்வாகிகளிடம் (சுகுமார்/குமரேசன்) எழுப்பி, தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையை (Collective Bargaining) நிலைநாட்ட நீங்கள் முன்வர வேண்டும். இல்லையெனில், இத்தகைய மௌனம் நிர்வாகத்திற்கு ஆதரவான போக்கையே ஊக்குவிக்கும்.
புரட்சிகர வாழ்த்துகளுடன்,
காசிராஜன்