மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு!
சாராய ஆலையை இழுத்து மூடு
மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தோழர் சுந்தரராசு மாவட்ட தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி, அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக தோழர் கல்பனா மாவட்ட செ.குழு உறுப்பினர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திருச்சி, தோழர் […]

மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

தோழர் சுந்தரராசு மாவட்ட தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி, அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக தோழர் கல்பனா மாவட்ட செ.குழு உறுப்பினர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திருச்சி, தோழர் கிருஷ்ணமூர்த்தி மக்கள் அதிகாரம் மாநில குழு உறுப்பினர், நாகை, ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தோழர் கோபிநாத் மாநில இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு, அவர்கள் சிறப்புரையாற்றினார்.சிறப்புரையில் டாஸ்மாக் மூட வேண்டும் என்கிற போராட்டம் மக்கள் மனதில் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று வேலூரில் பதினாறு வயது சிறுமி, டாஸ்மாக் மது போதையால் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாகும், இதனால் டாஸ்மாக் சாராயக்கடை மூடக்கோரி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி தினம் தோறும் சாராயத்தால் பல குடும்பங்கள் கொலை, தற்கொலை என்கிற வகையில் நடந்தேறி வருகின்றன.
மறுபுறத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இறந்த செய்தி வந்தவுடன் தமிழகம் முழுவதும் பல வழக்குகளை போட்டு 1500 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது போலீசு. அப்படி எனில் அரசுக்கும் போலீசுக்கும் கள்ளச்சாராயம் முதல் சந்து கடைவரை யார் விற்கிறார்கள் அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது முழுமையாக தெரிந்தும், லஞ்சத்திற்கும், லாபவெறிக்காகவும் சாராயத்தை திட்டமிட்டு அனுமதிப்பது என்கிற வேலையை தொடர்ந்து அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இந்த படுகொலைக்கு அரசு தான் முதல் குற்றவாளியாக இருக்கிறது. இறந்து போனவர்களுக்கு இழப்பீடு மட்டுமல்ல, படுகொலைக்கு காரணமான அரசு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். மறுபக்கத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின், தற்போது திராவிட மாடல் என்கிற பெயரில் செயல்பட்டு வரும் மு.க ஸ்டாலினின் திமுக அரசு டாஸ்மாகை பாதுகாத்து வருகிறது. இவர்களுடைய லாப வெறிதான் நாளை விவசாயிகள் பிரச்சினைகளிலும், தொழிலாளர்கள் பிரச்சினைகளிலும், ஆறு குளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிலும், மனல் கொள்ளை அடிப்பதிலும், பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுப்பதிலும், 8 வழிசாலையிலும், லாபவெறிக்காக செயல்படும். இதனை எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என திசைத்திருப்பி கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்வார்கள். ஆகவே கீழிருந்து மக்களை போராட்ட களத்திற்கு அணி திரட்டுவது தான் டாஸ்மாகை வீழ்த்த முடியும். கார்ப்பரேட் சேவையையும் முற்படிக்க முடியும் என்பதை விரிவாக விளக்கி பேசினார்.
தகவல்
தோழர்.சுந்தரராசு
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திருச்சி
8903042388
தோழர்.சுந்தரராசு
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திருச்சி
8903042388
