Category உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை ஏற்படுத்திய பிறகு, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் …

இந்தியா என்ன தர்ம சத்திரமா?
நீதிபதிகளின் வாய்கொழுப்பு!

ஈழத்தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்கிற காரணத்தால், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 2018-ம் ஆண்டு 10 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார். இதற்கிடையில் அவருடைய தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இந்தியாவை விட்டு உடனடியாக…

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது…

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்புவதற்கு வழியில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதுடன், மசோதா பிரச்சனையை தமிழக முதலமைச்சருடன் பேசித் தீருங்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

நிலுவையில் உள்ள …