செங்கனல்

செங்கனல்

தொழிலாளர்களின் ஊனை உருக்கும் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் – புகைப்படக் கட்டுரை:

இந்தியாவில் மின்சாரம் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரியை  வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்காக சுரண்டப்படும் தசையுள்ள சுரங்கங்கள். இத்தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அசைக்கும் ஒவ்வொரு கை அசைவிலும் தான் இந்தியா ஒளிர்கிறது. நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகளும், பெரும் நிலக்கரி மாபியாக்களுமே கட்டுப்படுத்துகிறார்கள். இதில்…

பி.எப்.ஐ மீதான ஒடுக்குமுறை/தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலின் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு : பாகம் – 2

பி.எப்.ஐ மீதான தடைக்கு மோடி அரசு கூறும் காரணங்களை குறித்து பாகம் -1ல் எழுதியிருந்தோம். இத்தடையை ஆதரிப்பவர்கள், மோடி அரசு நீண்டகாலமாக பி.எப்.ஐ செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாகவும் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பி.எப்.ஐ அலுவலங்களில் சோதனை மற்றும் தடை நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளதாகவும் வாதாடுகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக ரிபப்பளிக் டிவி, ஆஜ்தக் டிவி, ஜீ …

பசுக்களை பாதுகாக்க கோசாலை மையங்கள் திறப்பு! குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடல்!

நாடு அதிகாரம் மாற்றமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது; இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 நாளை அமிருத பெருவிழாவாக  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது மோடிக்கும்பல். ஆனால், இந்தியா அதிகாரம் மாற்றமடைந்த இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது, இந்திய தரகு முதலாளிகள் உலக பணக்கார பட்டியலில்…

சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசம்

தனக்கு எதிரான கருத்துக்கள் எந்த வழியில், வடிவத்தில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது என அடக்கி ஒடுக்கும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலானது, பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தனது ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கையில் இருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்த, பத்திரிக்கையாளர்கள், …

பரந்தூர் விமான நிலையம் – தமிழக மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் இவ்விமான நிலையம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தாங்கள் இக்கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுவோம் எனவும் கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக …

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வந்தனர் விசைத்தறி உரிமையாளர்கள். தற்போதைய மின் கட்டண …

மருந்து, மாத்திரைகள் தனியார்மயம்: இதை வாங்க பணம் இல்லையேல் மக்கள் பிணம்:

டோலோ 650 மி.கி. மாத்திரையை அதிக அளவில் பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு ரூ 1000 கோடி வரை இலவசங்கள் என்ற பெயரில் இலஞ்சம் கொடுத்துள்ளது மைக்ரோ லேப்ஸ் என்ற நிறுவனம் என்ற செய்தி பரவலாகப் பேசப்படுவதை அறிவோம்.

அனைவரும் அறிந்த  மேற்கண்ட இரகசியத்தை வருமான வரித்துறை புதியதாக கண்டுபிடித்துவிட்டதாக வானத்திற்கும் ,பூமிக்கும் குதிக்கிறது. நேரடி வரிகள் வாரியமோ …

விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்

 

 

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் …

இஸ்லாமிய அமைப்புகள் மீது நாடு முழுவதும் தொடுக்கப்படும் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

    ஒன்றிய பாஜக அரசின் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை), இஸ்லாமிய அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளின் அலுவலகங்கள் மீது ரெய்டு நடத்திக்கொண்டும் மற்றும் அதன் தலைவர்களை கைது செய்துகொண்டும் உள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம். (22-09-2022) அன்று நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ, பி…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…