செங்கனல்

செங்கனல்

வசந்தத்தின் இடிமுழக்கமென நக்சல்பாரி புரட்சிப்பாதையில் நவம்பர் புரட்சிப் பூ இங்கும் பூக்கும்!

நவம்பர் 7, 1917

பூவுலகில் முதல் சோசலிச நாடு தோன்றிய நாள்!

ஏகாதிபத்தியம் காகிதப்புலியே என தோலுரித்துக்காட்டி காலனிய மக்களின் மளங்களில் விடுதலைக் கனலை ஏற்றி வைத்த நாள்! முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை சாற்றிய சரித்திர நாள்!

அந்த நவம்பர் புரட்சி நாளுக்கு இன்று 106வது பிறந்த நாள்!

இன்று …

பல்கலைக்கழக ஊழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் காவி பாசிசம்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது. தற்போது பாஞ்சாப் மாநில ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் அம்மாநில வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை அம்மாநில அரசு நியமித்ததை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புரோகித் “அரசியல் சட்டம் என் கையில் …

குப்பைகளில் வாழும் பிலிப்பைன்ஸின் மணிலா மக்கள் : புகைப்படக்கட்டுரை!

முதலாளித்துவ பொருளுற்பத்தி சரக்குகளின் பரிவர்த்தனைக்கே பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலில் தான் இயற்கையாக கிடைக்கும் நீரை கூட பரிவர்த்தனை சரக்காக மாற்றி விற்பனை செய்து வருகிறது முதலாளித்துவம். ஆனால் இதே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தான் பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கு ஆபத்து என கூப்பாடு போடுகிறார்கள். உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன்…

தில்லை கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவே குழந்தை திருமணம்.

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் …

பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை உடனே விடுதலை செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர். இதற்கு எதிராகவும் பாஜகவின் இந்து மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் தொடர்ந்து போராடியவர்தான் டெல்லி பல்கலைகழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக…

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ) – பத்திரிக்கை செய்தி

தேதி: 20.10.2022 எமது அமைப்பின் 11வது பிளீனத்துடைய பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சுமார் 40 ஆண்டு காலமாக, நக்சல்பாரி பாரம்பரித்தையும்…

ஆர்.எஸ்.எஸ்.சின் கோரமுகத்தை மறைத்து பாதுகாக்கும் சி.பி.ஐ.

இஸ்லாமிய பயங்கரவாதம் என மூச்சுக்கு முன்னூறுதரம் முழங்கும் காவிகளுக்கு, காவி பயங்கரவாதம் எனும் சொல் எட்டிக்காயாய் கசக்கிறது. நாடு முழுவதும் கலவரம் செய்து சிறுபான்மையினத்தவரைக் கொன்று குவித்தது மட்டுமல்லாது, திட்டமிட்ட குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொல்லும் வேலையிலும் காவி பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பலமுறை அம்பலமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் நாண்டெட் குண்டுவெடிப்பு. 2006 ஆண்டில்…

ஜக்கிக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றிய அரசு

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கட்டிடங்களுடனும், 112 அடி உயர ஆதியோகி சிலையுடனும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆசிரமம் பல்வேறு சுற்றுச்சூழல் விதி மீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அந்த ஆசிரமம் அடர்த்தியான வனத்திற்கு நடுவில், காற்றாறுகளுக்கும், …

ராஜ ராஜ சோழன் – சனாதனத்திற்கு சேவை செய்த பார்ப்பனிய அடிமை!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்த விவாதம் தமிழக காட்சி மற்றும் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த தின விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கிறார்கள் எனக் கூறிவிட …

கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களைப் பெருக்க ஒரே கட்சி, ஒரே ஆட்சி!

“மக்கள் சேவையை மட்டுமே பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது” என்பதற்கு உலகமகா சாதனைகளாக குஜராத்தில் அணைகள் கட்டியது, கடற்கரை பகுதியை மேம்படுத்தியது, அருங்காட்சியகம் அமைத்தது, துறைமுகங்களை நவீனப்படுத்தியது, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சியை எட்டியது அனைத்திற்கும் காரணம் ஒன்றியத்திலும் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வான ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததுதான். எனவே ‘ஒன்றியத்திலும், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால்தான்…