செங்கனல்

செங்கனல்

5ஜி ஏலம் – தொலைதொடர்புத் துறையைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளின் கார்டல்

5ஜி அலைக்கற்றைகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஏலம் முடிவடைந்துவிட்டது. 7 நாட்கள் 40 சுற்றுக்கள் நடந்த ஏலத்தில் மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிற்கான அலைக்கற்றை, ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைத் தொகையாக 4.3 லட்சம் கோடி ருபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த அடிப்படைத் தொகையை விட மிகக் குறைவான விலைக்கு,…

அரிசிக்கும் ஜி.எஸ்டி., ஐ.சி.யூ.க்கும் ஜி.எஸ்.டி. – பாடல்

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ள காவி கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக கொண்டு வரப்பட்ட பாடல்  

ஜிஎஸ்டி வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக் கயிறு.

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், பிரச்சார இயக்கம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இதுவரை வரிவிதிக்கப்படாமல் இருந்த பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வரி வலைக்குள் இழுத்துள்ளதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை பாசிச மோடி கும்பல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே இந்திய மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் சுருக்குக் கயிற்றை மேலும்…

இதுதாண்டா இந்தியா என்று கற்றுக்கொடுக்கும் மூதாட்டி நல்லம்மாள்

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை” என்று எந்த ஒரு சமூகப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் இதே காலகட்டத்தில்தான், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் என்பரும் இருக்கிறார். இந்த நன்னை கிராமம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பியான்…

தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகில் 31.07.2022 அன்று காலை 11 மணிக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒராண்டாக நடைபெற்ற நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களை…

பொய் வழக்கிலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கு தான் எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ போராடுகிற உரிமையோ வாசனைக்கு கூட கிடையாது. ஜனநாயக முறைபடி போராடினால் கூட பொய் வழக்கு போடுவது, பிரசுரம் கொடுத்தால் சிறையில் தள்ளுவது என எந்த சட்ட விழுமியங்களையும் போலீசு பின்பற்றுவது கிடையாது, மாறாக அடக்குமுறை கருவியாகவே போலீசு உள்ளது. நீதிமன்றமோ…

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும்   பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து  கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரம்(online&offline) பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நாளில்  பத்திரிக்கையாளரும் செய்திகளின்…

தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்! மோடி அரசின் கையாலாகாத்தனம்!

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் படி பார்த்தால் 16 கோடி பேருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையின்மையின் அளவானது இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. அக்னீபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் உள்ள 30000 பணிகளுக்கு…

மாணவி ஸ்ரீமதி மரணம் : எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜுலை 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தை வன்முறையாகவும் கலவரமாகவும் அராஜகமாகவும் சித்தரிப்பதிலும், அந்த அருவருக்கத்தக்க பெருங்கூச்சலுக்குள் மாணவியின் மரணத்தை தற்கொலை என்று புதைத்துவிட்டதில் வெற்றி கண்டுள்ளன தமிழக அரசும் நீதிமன்றங்களும். இச்சம்பவம் தொடர்பாக போலிசு எதைச் செய்தியாக்க விரும்பியதோ அதை மட்டுமே வெளியிட்டு, வர்க்கப் பாசம் வழிந்தோட தனியார்…