செங்கனல்

செங்கனல்

பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

 

 

போபர்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், சோலார் பேனல் ஊழல்,  2ஜி அலைக்கற்றை ஊழல் என அனைத்தையும் முன்னிறுத்தி மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்தது. இதில் ஒரு ”கூந்தலைக்கூட” இன்றுவரை பிடுங்கவில்லை.

இவர்கள் 2014-க்கு …

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டனர்.

இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் போது இந்துக்களின் வாக்குகளை அறுவடை …

தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை – வெளியீடு

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கடந்த வெள்ளியன்று (02/02/2024) சேலம் மாநகரில், மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பாக ஒரு கண்டனக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் “தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை” என்ற தலைப்பில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒரு சிறு வெளியீட்டைக் கொண்டுவந்துள்ளது. அந்த வெளியீட்டை நமது வாசகர்களுக்கு அறிமுகம் …

அரசு போக்குவரத்து தொழிலாளார்களை நம்பவைத்து கழுத்தறுத்தது
திராவிட மாடல் ஸ்டாலின் அரசு!

 

அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய ஊதிய உயர்வைப் பெறுவதற்குக் கூட மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் …

இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

 

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதி முழுவதும், இஸ்ரேலின் ஏவுகணைகளால் துளைக்கப்பட்டு, சிதைந்துபோய்க் கிடக்கிறது. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக கொன்றழித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்காமல் இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் உறுதியாக …

கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையதாகும். எந்த நாடும், தான் எவ்வளவு தடுப்பூசிகளை …

ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்து விட்டது ‘நீட்’;
பட்டப்படிப்பையும் புதைக்க வருகிறது ‘கியூட்’..!

 

பள்ளிப்படிப்பை முடித்து ஆயிரம் கனவுகளோடு, கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் எதிர்காலங்களான மாணவ – மாணவிகள். இவர்களில் குறிப்பாக கிராமப்புற – நகர்ப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட – மாணவ – மாணவிகளின் எதிர்காலமானது கலை – அறிவியல் கல்லூரிகளில்தான் விதைக்கப்படுகிறது.

இவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்து தற்குறிகளாக்கும் நோக்கத்தில் பாசிச மோடி அரசால் …

காவிகளின் இந்துராஷ்டிரத்தில் பெண்கள் வெறும் பொம்மைகளாக, உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

பெண்களை நதியாக, இயற்கையாக, தெய்வமாக வழிபடுகிறோம் என என்னதான் காவிகள் கதையளந்தாலும் அவை அனைத்துமே மேடையில் அவர்கள் போடும் நாடகம் மட்டுமே என்பதை அவர்களது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும். காவி பாசிஸ்டுகளின் கருத்தியல் அடிப்படையான சனாதன தர்மம் என்பது சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல பெண்களுக்கும் எதிரானதுதான். இந்து மதத்தின் புனித நூலாக காவிகள் முன்னிறுத்தும் பகவத் …

இந்துத்துவ கொள்கைக்கு ஏற்ப ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம்.

 

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராமானுஜம் கல்லூரி, மத்திய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் கற்றல் மற்றும் கற்பித்தல் மையமாக செயல்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் மையமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் “Shrimad Bhagavad Gita: Enlightenment and Relevance” …

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அப்போதைய தென்மண்டல…