செங்கனல்

செங்கனல்

மின் கட்டண உயர்வும், அதானியின் நிலக்கரி திருட்டும்! தோழர் முத்துக்குமார்

நிலக்கரி இறக்குமதியில் அதானியின் கொள்ளையை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ். முழு தகவல்களுடன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களின் காணொளி.   …

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன், அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடாதபடிக்கு அப்பகுதியைச் சுற்றிலும் ஏவுகணைத் தாக்குதல்களையும், விமானம் மூலம் குண்டு …

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்சவரம்பு தகர்க்கப்படும் என்றும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் …

மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான ஓசூர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓசூரில் அக்டோபர் 8ம் தேதியன்று பொதுக்கூட்டம் மற்றும் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள்…

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! – பொதுக்கூட்டம் – நேரலை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அக்-8 – 2023 இன்று மாலை 4  மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி ஓசூர்…

காவிரி நீர் பங்கீடும்! இந்தியா கூட்டணியும்!

    காவிரி நீர் பங்கிட்டில் அடிமை இந்தியா முதல் ‘சுதந்திர’ இந்தியா வரை இழுபறிப் போராட்டமாகவே நீடிக்கிறது. தீர்ந்தபாடில்லை ஆனால், கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தமிழ்நாட்டிற்கு 215 டிஎம்சி நீரை பெற்று வந்தது போய் இன்று 37.50 டிஎம்சிகே உன்னைப்பிடி என்னைப்பிடி என்ற கதையாகி விட்டது. இவற்றைக்கூட மாபெரும் …

மின்சாரக் கட்டண உயர்வு
தனியார்மயத்திற்கு எதிராக போராடுவதே தீர்வு
தோழர் முத்துக்குமார் நேர்காணல்

1948ல் அம்பேத்கர் கொண்டு வந்த மின்சார விநியோகச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவை என கூறப்பட்ட மின்சாரம், இன்றைக்கு தனியார்மய கொள்கைகளின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசுவதுடன், தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதை, ஜீவா டுடே யூடியூப் சேனலில் வெளியான நேர்முகக்…

மகளிர் இடஒதுக்கீடு: பாசிஸ்டுகளிடம் நீதி கிடைக்குமா?

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு  செய்யும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு கடந்த 19-09-23 அன்று ஒன்றிய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அறிமுகமாகும் முதல் மசோதாவாக இதை சட்டமாக்க பாஜக முன்வந்திருப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் …

மின்சார தனியார்மயத்துக்கு எதிரான
ஓசூர் பொதுக்கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!    …

கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த வேதாந்தாவின் அனில் அகர்வால்!
வேதாந்தாவுடன் பாஜக கள்ளக்கூட்டு!

 

 

திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். மூன்று அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி திமுக ஊழல் கட்சி அதற்கு வாக்களிக்காதீர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற …