செங்கனல்

செங்கனல்

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமும், நயாரா நிறுவனமும் கொள்ளை லாபத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

கொலைகார பாக்ஸ்கான் கட்டுவது விடுதி அல்ல தொழிலாளர்களை அடைக்கும் சிறைச்சாலை

கான்டிராக்ட் தொழிலாளர்கள்; அதுவும் பெண்கள் என்றால் எந்த வகையிலும் சுரண்டலாம், எந்த விதிமீறலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே  பாக்ஸ்கான் தன் உற்பத்தி தளத்தை இங்கு விரிவுபடுத்துகிறது.

உலக முதலாளித்துவத்தை அழித்தொழிக்க ஸ்டாலின் பிறந்த தினத்தில் உறுதியேற்போம்!

டிசம்பர் 21 – தோழர் ஸ்டாலினின் 143-வது பிறந்தநாள்! தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!     தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை அந்த கம்யூனிச…

தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

காவிக் கும்பலுக்கு போட்டியாக இந்துத்துவக் கொள்கைகளைப் பேசி பாஜகவை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு தலைவரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், பாஜக செய்தது போல பல நூறு கோடிகளை வாரி இறைத்து, மோடிக்கு நிகரான ஒரு ஆளுமையை, பிம்பத்தைக் கட்டியமைத்தாலும், இந்துத்துவ அரசியலைப் பேசும் வரை அது காவி பாசிச கும்பலுக்கான மக்கள் அடித்தளத்தை மேலும் அதிகரிக்கவே உதவும்.

100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

காங்கிரசாவது பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சித்தது ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் கோவனத் துணியையும் உருவி முதலாளிகளுக்குக் கொடுக்க துடிக்கும் கார்ப்பரேட் அடிமை காவிக் கும்பலோ நூறு நாள் வேலைத்திட்டத்தையும் ஊத்தி மூட முயற்சிக்கிறது.

வெடித்து கிளம்பும் தொழிலாளர்கள் போராட்டங்கள்! அடக்குமுறைக்கு தயாராகும் பிரிட்டன் அரசு!

கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் திண்டாடிய போது, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நேரக் கணக்கின்றி வேலை செய்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு கேட்டுப் போராடும் போது அவர்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கப்பார்க்கிறது நன்றி கெட்ட பிரிட்டன் அரசு.

வேலையிழப்பும், வேலையில்லாத் திண்டாட்டமும் முதலாளித்துவத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்

ஐ. டி. துறையில் ஆட்குறைப்பு சம்பந்தமான செய்திகள் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக Meta (Facebook), Amazon, Twitter, இன்னும் பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செலவினங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை மிகவும் ‘நாகரிகமாக’  Cost Cutting என்று கூறி வருகின்றனர். பொதுவாக Layoff என்பது,…

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

  பத்திரிக்கை செய்தி 14-12-2022 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே, ஜனநாயக சக்திகளே! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு கடந்த 10-12-2022 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் 09-12-2022 அன்று காலை 10.52 மணிக்கு 93600 57937 என்ற எண்ணிலிருந்து மக்கள் அதிகாரம்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

அவசர நிலை காலத்தை விட மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்தின் நிலை மிகமோசமாக இருப்பதாக அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நிகழ்காலத்தில் ஜனநாயகத்தை மயிரளவும் மதிக்காத காவி கும்பல், அதன் குரல்வலையை நெரித்ததோடு மட்டுமில்லாமல் அந்த உண்மையை மறைத்து அதனிடத்தில் வேதகாலத்தில் ஜனநாயகம் இருந்தது என்ற பொய்யை வைத்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றுகிறது.

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை