பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் முக்கியமான முதலாளித்துவ அறிவுஜீவியுமான பரகலா பிரபாகர் கடந்த மே 9 ஆம் தேதி தி வயர் இணையதளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். “தேர்தலில் பாசிசத்தை வீழ்த்திவிடலாம்” அல்லது “ஜூன் 4-க்குப் பிறகு மோடி தோற்றால் மூச்சுவிடவாவது அவகாசம்” …












