செங்கனல்

செங்கனல்

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஊடகங்களும் ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் தேர்தலை ஒரு ஜனநாயக திருவிழா …

“கம்யூனிசமே வெல்லும்!” புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

இன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம், உலகையே ஆளப்பிறந்ததாக இருமாந்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள். அதே முதலாளித்துவம் பாசிசமாகப் பரிணமித்து மனித குலத்தின் எதிரியாக நின்ற போது, மிகப் பெரிய ஏகாதிபத்தியங்கள் எல்லாம் கை கட்டி வாய் பொத்தி நின்ற…

கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

733 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி …

டிங்கிரி டிங்காலே – விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல்

புதியதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தமிழக அரசியலில் மாற்றத்தைக்  கொண்டுவருவார் என்றும், மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்றும், தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதாக கட்டமைக்கப்படும் விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல். பாடல் தயாரிப்பு : புரட்சிகர மக்கள் அதிகாரம், கலைக்குழு.   சமூக மாற்றத்திற்கான ஊடகமான செங்கனலை ஆதரிப்பீர்! நிதி உதவி…

சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியது. அதன்பிறகு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு …

ரேசன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க சதி செய்யும் காவி கார்ப்பரேட் பாசிசம்!

நாடு முழுவதும் மக்களுக்கு உணவு தானியங்களையும், மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சக்கரை உள்ளிட்டப் பொருட்களை இலவசமாகவும், மலிவு விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ரேசன் கடைகளை மூடிவிட்டு அந்த பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு “உதவும் வகையில்” மலிவு …

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”

இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் …

ஜனநாயக சக்திகளை
அழித்தொழிக்க அரைகூவும் அர்ஜுன் சம்பத்!
பாசிசக் கோமாளியின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்!

பாசிஸ்டுகள், தங்களது எதிரி யார் என்பதற்கு எப்போதும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள், தங்களை விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் எனத் தங்களது பட்டியலில் உள்ள அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக கருதுவதுடன், அவர்களை ஒடுக்குவதையும் பாசிஸ்டுகள் திட்டமிட்டுச் செய்கின்றனர். முசோலினியின், இட்லரின் பாசிச இயக்கங்கள் தொடங்கி, நம் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவிப் …

நோஞ்சான் சமூகத்தை உருவாக்கும் பாசிச மோடி அரசு

 

 

திங்களன்று (21 அக்டோபர் 2024) நடைபெற்ற என்.டி.டிவி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும், இந்தியாவிற்கு வந்து குவியும் முதலீடுகளையும் பார்த்து உற்சாகமடைகின்றது” என்று பேசியுள்ளார். மேலும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, “கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பங்குச் சந்தை 22,300 புள்ளிகளில் இருந்து …

முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் புல்டோசர்
நாளை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மீது திரும்பும்

காவி கார்ப்பரேட் பாசிச சக்தியான மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. சங்கப்பரிவார கும்பல் தன் பாசிசப் படைகளைக் கொண்டு சிறுபான்மையினரின் மீது தாக்குதல் தொடுப்பது ஒரு புறம் என்றால், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போலீசையும், உள்ளாட்ட்சி அமைப்புகளையும் …