செங்கனல்

செங்கனல்

புதிய கல்விக் கொள்கை:
மும்மொழிக் கொள்கை மட்டும்தான் பிரச்சனையா?

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 2400 கோடி ருபாய் நிதியை ஒன்றிய அரசு தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வழங்கப்பட வேண்டிய இந்த நிதியை, 2023ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக தரமால் இழுத்தடித்து வந்தது மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு …

அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!

பத்திரிக்கைச் செய்தி!

அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலொன்று சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்திய பிறகு தோழர்கள் …

ஈழத்து எம்.ஜி.ஆர் பிரபாகரனின்
பொய்கள் சதிகள் கொலைகள்

காவி பாசிசத்தின் பாதந்தாங்கியான சீமான், தந்தை பெரியார் குறித்து பேசி வந்த அவதூறுகளை அடுத்து, சீமானின் தம்பிகளில் பலரும், பிரபாகரனையும், பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.  இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இணையக் கூலிகளும் கைகோர்த்துக் கொண்டு பெரியாருக்கு எதிரான துவேசப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  

2009ல் நடந்த இனப்படுகொலைக்குப் …

மலம் தண்ணீரிலா
திராவிட மாடலின் தலையிலா?
காணொளி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “நிலை அறிக்கையில்” (status report) வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன்…

நூல் அறிமுகம்:
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்

”பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்; ஒரு பிற்போக்கு தத்துவம் பற்றிய விமர்சன ஆய்வுரை” என்ற இந்த நூலை லெனின் 1908ல் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரை ஜெனிவா, லண்டனிலிருந்து எழுதினார். ஒன்பது மாதங்களாக லெனின் மேற்கொண்ட பிரம்மாண்டமான, ஆக்கப்பூர்வமான விஞ்ஞான ஆய்வின் விளைவே இந்த நூல். லெனின் இந்த நூலில் மேற்கோளாக் காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற…

பட்ஜெட் 2025-26 : வரிச்சலுகைகள் எனும் கண்கட்டி வித்தை!

“பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியாது” என்றொரு சீனப் பழமொழியிருக்கிறது. ஆனால் முடியும் என்று தனது எட்டாவது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, இந்த பட்ஜெட்டில் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது …

KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு:
பல்கலைக்கழகங்கள் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடி!

கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால்  (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை(CBI). கைது செய்யபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் பேராசிரியர்கள்.

இந்த மெத்தப் …

திருப்பரங்குன்றம் – கலவரம் செய்யும் காவி கும்பலை கைது செய்து அடக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என அடுத்தடுத்து மசூதிகளைக் குறிவைத்து மக்கள் மத்தியில் மத வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்வதை…