Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

புரட்சியின் கனலாக ஒளிவீச வருகிறது
செங்கனல் – அச்சு இதழ்

“ஒரு பத்திரிக்கை என்பது பிரச்சாரகன், கிளர்ச்சியாளன் மட்டுமல்ல; ஒரு அமைப்பாளனும் ஆகும்” என்ற லெனினின் வார்த்தைகளுக்கு ஏற்ப, 1985 நவம்பர் முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய – லெனினிய அரசியலை ஏந்தி வெளிவந்து கொண்டிருந்தது, எமது “புதிய ஜனநாயகம்”…

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலும் காஷ்மீர் மக்களின் துயரங்களும்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய அரசுப் படைகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளை தீவிரவாதிகளுடையது எனக்கூறி வெடிபொருட்களை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்தி வரும் புல்டோசர் இராஜ்ஜியத்தை காஷ்மீருக்குள்ளும்…

கொரோனா உயிரிழப்பு: திட்டமிட்டு உண்மையை மறைத்த மோடி கும்பல்!

கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும் தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து…

போலி தேசியவெறியை, போர்வெறியைக் கடைவிரிக்கும் இந்தி சினிமா

ஓரே ஒரு தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்தி நாடு முழுவதையும் தனது போலி தேசிய வெறி, போர் வெறி அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதை சமீபத்தில் காவி பாசிசக் கும்பல் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும்,…

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட்…

வறுமையையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்!

ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக…

இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில்…

தங்க நகைக்கடன் தொடர்பான RBI-யின் புதிய வரைவு விதிகள்: மக்கள் மீது தொடுத்திருக்கும் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும்…

பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா? || அறம் இணைய இதழ்

கருத்தாடல் பக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் ) யின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜின் படுகொலையை அடுத்து அறம் இணைய இதழில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு ஏப்ரல் 22. க்குப்பிறகு அரவமில்லாமல் ஒடுங்கியிருந்த உள்துறை அமைச்சர் அமீத் ஷா நேற்று X…

ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா?
அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக 13-05-2025 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அனைத்து…