மாணவி ஸ்ரீமதி மரணம் : எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜுலை 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தை வன்முறையாகவும் கலவரமாகவும் அராஜகமாகவும் சித்தரிப்பதிலும், அந்த அருவருக்கத்தக்க பெருங்கூச்சலுக்குள் மாணவியின் மரணத்தை தற்கொலை என்று புதைத்துவிட்டதில் வெற்றி கண்டுள்ளன தமிழக அரசும் நீதிமன்றங்களும். இச்சம்பவம் தொடர்பாக போலிசு எதைச் செய்தியாக்க விரும்பியதோ அதை மட்டுமே வெளியிட்டு, வர்க்கப் பாசம் வழிந்தோட தனியார்…