செங்கனல்

செங்கனல்

மூலதனக் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் ஐரோப்பிய தொழிலாளர்கள்!

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள்  உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும்  நடவடிக்கைகளுக்கு  எதிராக அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் ஐரோப்பிய கண்டமே குலுங்குகிறது , 

ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தங்களது ஆட்சியை தக்கவைக்க  உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு சிறு துரும்பை கூட அசைக்காமல், அவர்களை சுரண்டி …

மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்!

குறிப்பு: சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, பசு அரவணைப்பு தின அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல வாரியம் 10.02.2023 அன்று திரும்பப் பெற்றுள்ளது.

காதலர் தினம் (பிப்ரவரி 14) வந்தாலே காவி-காளிகளுக்கு கை அரிக்க ஆரம்பித்துவிடும். பூங்காக்களில் பேசிக் கொண்டிருக்கும் ஆண்-பெண் க்கு திருமணம் செய்து வைப்பது, இளைஞர்கள் …

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு!

பத்திரிக்கைச் செய்தி 09-02-2023 அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு! அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் அதிகாரம் என்ற நமது அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், அரசியல் இயக்கங்களையும் எடுத்து அரசியல் சக்திகள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அமைப்பாகத் திகழ்ந்து…

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியாகும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள்

இரு மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள்  இல்லாதொரு உலகம் எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மொத்த உலகமும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும்.

மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் …

பட்ஜெட் 2022-23: சமூக-பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை கணிசமான அளவு குறைத்துள்ள மோடி அரசு!

 

 

திருவள்ளுவர் வழியில் மோடி இந்தியாவை ஆட்சி செய்வதாகவும் ஏழைகள் பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரின் கனவுகளையும் அரசு நனவாக்கி வருவதாகவும் அரசுத் தலைவர் முர்மு சமீபத்திய பட்ஜெட் உரையில் பேசியுள்ளார். பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குக் கூடத் தெரியும் முர்மு பேசியது வடிகட்டியப் பொய்யென்று. திமுக அரசின் சட்டமன்ற உரையில் விவரப் பிழையிருப்பதாக கூச்சல் …

அதானியின் பங்கு மோசடி! கார்ப்பரேட் மோசடிக்கு ஒரு உரைகல்!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு முந்திய மோடியின் கூட்டாளி அதானி ஒரே நாளில் 7-வது இடத்துக்கு வந்துவிட்டார். கடந்த இரண்டு வருடத்தில் அதானி கும்பலின் சொத்து மதிப்பு 891% அளவிற்கு உயர்ந்துள்ளது எப்படி என்பது குறித்து ஒரு ஆழமான ஆய்வை கடந்த இரு வருடங்களாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன் முடிவாக 2023 …

2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்!

குஜராத் படுகொலை நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்டது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் (பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை) மோடியின் மேற்பார்வையில் சங்க பரிவார இந்துமதவெறி பயங்கரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு கிட்டத்தட்ட பொதுப் புத்தியிலிருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் இப்படுகொலையைப் பற்றியே அறியாத ஒரு இளம் …

ஒப்பந்த தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடினால் வெல்ல முடியும் என நிரூபித்த யசாகி தொழிலாளர்களின் போராட்டம்!

இன்றைக்கு ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் அப்பரண்டீஸ்கள் (Apprentice), பயிற்சி பெறுபவர் (Trainee), நீம் தொழிலாளி, என பல பெயர்களில் பணி நிரந்தரம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வேலைசெய்கின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு கூட இல்லாமல் முதலாளிகளின் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களின் ஒரே பலம் …