செங்கனல்

செங்கனல்

அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இறங்கு முகத்திலேயே உள்ளது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் பங்குச் சந்தை முதலீட்டாளர்ளும் பத்திரிக்கைகளும் அதானி குழும முறைகேடுகளை விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக அதானியின் ஹைட்ரஜன் எனர்ஜி நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்ய இருந்த டோடல் எனர்ஜி என்ற பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம் தனது மூதலீட்டை …

உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்!

சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8. 1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள் அன்றைய ஆட்சியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து இடைவிடாமல் பாட்டாளி வர்க்கப்…

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…

ஒருவேளை பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால்?

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாமலே, பல குறுக்குவழிகளில் தங்களது ஆட்சியை நிறுவிவந்துள்ளது. பாஜகவிற்கு பெரிய அளவில் கட்சிக் கிளைகளோ, உறுப்பினர்களோ இல்லாத மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. …

அதானி மோசடி : தொடர்ந்து இழப்பை சந்திக்கும் எல்.ஐ.சி.

ஹிட்டன்பெர்க் அறிக்கை அதானி நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அறிக்கை வெளிவந்து ஒருமாதம் ஆன நிலையில் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3400 ரூபாயிலிருந்து 1387 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் விளைவாக, ஜனவரி 20ம் தேதி 9,72,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு பிப்ரவரி …

JNU மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம்

  டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், பூலே  படங்கள் உடைப்பு – காரல் மார்க்ஸை அவதூறாக விமர்சித்த தமிழக ஆளுநர் ரவியின் திமிர்த்தனத்திற்கு முடிவு கட்டுவோம், என்ற முழுக்கத்தின் கீழ் 27.02.2023 அன்று மாலை 4 மணிக்கு, தர்மபுரி BSNL அலுவலகம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பாக…

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

 

 

எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும் ஆளுநர், வாய் திறந்தாலே தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்கள் …

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் – பாகம் 2

இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. கொலீஜியம் அமைப்பு பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கொலீஜியம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவான…

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம்

“இந்தியாவை பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் 
ஆபத்தானவை என்று கூற விரும்புகிறேன். மதமாற்றம், குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில் 
இவ்விரண்டு மதங்களும் சமமாக ஆபத்தானவை.

"இஸ்லாமிய பயங்கரவாதம் பச்சை பயங்கரவாதம் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதம் 
வெள்ளை பயங்கரவாதம்.

“கிறிஸ்துவப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது. நடராஜப் பெருமானின் 
தோரணையை இயேசு கிறிஸ்துவின் பெயருடன்