செங்கனல்

செங்கனல்

மருந்து, மாத்திரைகள் தனியார்மயம்: இதை வாங்க பணம் இல்லையேல் மக்கள் பிணம்:

”தனியார்மயம் என்ற பெயரில் உயிர்காக்கும் மருத்துவத்தை, இலாபத்தை மட்டுமே குறியாகக் (இலக்காகக்) கொண்டு செயல்படும், தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டு, மனித உயிரைக் காக்கும் மருந்துகளின் பரிந்துரைகளுக்கு மட்டும் இலஞ்சம் தருவது மாபெரும் தவறு என்று குற்றம் சுமத்துவதும், வழக்குத் தொடர்வதும் பித்தலாட்டம் இல்லையா!”

இஸ்லாமிய அமைப்புகள் மீது நாடு முழுவதும் தொடுக்கப்படும் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

    ஒன்றிய பாஜக அரசின் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை), இஸ்லாமிய அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளின் அலுவலகங்கள் மீது ரெய்டு நடத்திக்கொண்டும் மற்றும் அதன் தலைவர்களை கைது செய்துகொண்டும் உள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம். (22-09-2022) அன்று நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ, பி…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

1.54 இலட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள வேதாந்த-பாஸ்கான் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடிக்கு,அதாவது மூன்றில் ஒருபங்கிற்கு, சலுகைகளை வழங்கி முதலாளிகளின் தாசர்களாகவே காட்டிக்கொள்கின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம் 2)

இந்த சினிமா மட்டுமல்ல, பொதுவில் பின்நவீனத்துவம், அடையாள அரசியல் பேசுபவர்கள் முன்வைக்கும் நச்சுக் கருத்துக்கள் கம்யூனிஸ்டு கட்சிகளின் அணிகளை அரித்துத் திண்கிறன. இரண்டு சினிமாவை எடுத்துவிட்டு, நாலு புத்தகம் போட்டுவிட்டு ‘கம்யூனிஸ்டுகள் என்ன கிழித்திவிட்டார்கள்’ என்று இவர்கள் அகங்காரமாகக் கேட்கிறார்கள்.

உழைக்கும் வர்க்கத்தினரை கொலை செய்யும் இந்திய ஆளும் வர்க்கம்

2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் பிரிவினரே உள்ளனர். இதற்கு பிரதானக் காரணம் உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் மோசமான பொருளாதார நிலைமைகளே என்பது சொல்லாமலே விளங்கும். மறுபுறமோ இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நிதி/தொழில் நிறுவனங்களின் லாபம்/சொத்து மதிப்புகள் வரலாறு காணாத…

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு விசைத்தறி கூடமும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரைக்கும் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மின் கட்டண உயர்வு விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கிறது.

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம்-1)

மக்களை தனித்தனியாக அடையாளப்படுத்தி பிரிப்பதன் மூலம் வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி ஏகாதிபத்தியங்களுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் சேவை செய்யும் பின்நவீனத்துவ சித்தாந்தத்தின் அரசியல் வெளிப்பாடுதான் அடையாள அரசியல். அதனால் அதன் ஆன்மாவே கம்யூனிச வெறுப்புதான். இந்த அடையாள அரசியல் பெற்றெடுத்த பிள்ளைதான் நட்சத்திரம் நகர்கிறது எனும் இத்திரைப்படம்.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில்…